திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சென்சார் போர்டை கதறவிட்ட ராயன், தில்லாக இறங்கிய மாறன்.. விவகாரமான ஆளுன்னு நிரூபித்த தனுஷ்

Dhanush: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ஐம்பதாவது படமான ராயன் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் தனுஷ் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் தன்னைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் ராயன் படத்திற்கு கிடைத்த சென்சார் சர்டிபிகேட் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி படத்தில் அதிகபட்ச வன்முறை காட்சிகள் இருப்பதால் சென்சார் அதிகாரிகள் A சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். முதலில் யு/ஏ சர்டிபிகேட் கொடுப்பதற்காக சில காட்சிகளை கட் செய்யும்படி அவர்கள் கூறியிருக்கின்றனர்.

ஆனால் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஏ சர்டிபிகேட் வந்தால் பரவாயில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று தில்லாக இதில் இறங்கி இருக்கிறார்.

ராயன் படத்திற்கு கிடைத்த சர்டிபிகேட்

அதனால் நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது முன்னதாக தனுஷின் ஆரம்பகால படங்களான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ட்ரீம்ஸ், புதுப்பேட்டை, வடசென்னை ஆகிய படங்களுக்கு ஏ சர்டிபிகேட் கிடைத்திருந்தது.

அதன் பிறகு ராயனுக்கு கிடைத்திருக்கிறது. உண்மையில் இப்படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள் அதிகபட்சமாக இருக்கிறதாம். இதை பார்த்து சென்சார் அதிகாரிகளே மிரண்டு போயிருக்கின்றனர்.

ஆனால் எந்த ஒரு காட்சியையும் கட் செய்ய முடியாது. ஏனென்றால் அத்தனையுமே படத்திற்கு தேவையானது தான். அதனாலேயே கலாநிதிமாறன் ஏ சர்டிபிகேட் கிடைத்ததற்கு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

அந்த அளவுக்கு அவருக்கு படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதாம்.. தற்போது தனுஷ் குபேரா படத்தில் பிஸியாக இருக்கும் நிலையில் ராயன் நிச்சயம் பல கோடி வசூல் லாபம் பார்க்கும் என படக் குழுவினர் முழு நம்பிக்கையோடு சொல்லி வருகின்றனர்.

கலாநிதி மாறனை இம்ப்ரஸ் செய்த ராயன்

Trending News