திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நானே வருவேன் படத்தில் அசத்திய தனுஷ்.. சீனியர் நடிகருக்கே டஃப் கொடுத்த சம்பவம்

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நேற்று வெளியான நானே வருவேன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்டுகள் என மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.

மேலும் செல்வராகவன் தான் இயக்கிய படத்தில் முதல் முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்துஜா, எல்லி அவ்ராம் என இரண்டு நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர். நானே வருவேன் படத்தில் பெரிதும் பேசப்பட்டது தனுஷின் நடிப்பு தான். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் வித்தியாசம் காட்டியுள்ளார்.

Also Read :தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

நானே வருவேன் படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதாவது பிரபு, கதிர் என இரட்டைப் பிள்ளைகளாக தனுஷ் வாழ்ந்து வருகின்றனர். அதில் பாடி லாங்குவேஜ், குரல் வளம், சிரிப்பு என எல்லாவற்றிலுமே இரண்டு மனிதராக இருந்தார்.

இந்த படத்தில் இருவரும் வெவ்வேறு மனிதர்கள் என்பது போல தான் ரசிகர்களை நினைக்க வைத்தது. அந்த அளவுக்கு இந்த படத்தில் தனது கடின உழைப்பை போட்டுள்ளார் தனுஷ். இந்நிலையில் இப்போது தனுஷ் போல அந்த காலத்தில் சிவாஜி கணேசன் மட்டும் தான் இப்படி நடித்த அசத்துவார்.

Also Read :23 வயது இளம் வீரருடன் டேட் செய்யும் தனுஷ் பட நடிகை.. அப்பா 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயுது

இரட்டை வேடமாக இருந்தாலும் கொஞ்சம் கூட அவரது நடிப்பில் ஒற்றுமை இருக்காது. அந்த இரண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை சிவாஜி மெருகேற்றிக் கொள்வார். தற்போது சிவாஜியையே மிஞ்சும் அளவிற்கு தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்தது.

மேலும் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தனுஷின் இந்த வெறித்தனமான நடிப்பிற்காகவே திருச்சிற்றம்பலம் படத்தை போல் நானே வருவேன் படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Also Read :நானே வருவேன் படத்தை கண்டிப்பாக பார்க்க 5 காரணங்கள்.. தனுஷ் செய்யப் போகும் சம்பவம்

Trending News