ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை அவிழ்த்துவிட்ட தனுஷ்

Jigarthanda Double X Movie Review: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் முதல் விமர்சனத்தை தனுஷ் அவிழ்த்துவிட்டு இணையத்தை பரபரப்பாக்கி உள்ளார். இந்தப் படம் வரும் நவம்பர் 10 தேதியான இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படத்தை தனுஷ் நேற்று இரவு பார்த்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்ட முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்தேன், இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் மிக அருமையாக இயக்கியிருக்கிறார். எப்படி தான் எஸ் ஜே சூர்யா இப்படி அசத்தலாக புதுப்புது வெரைட்டி நடிப்பை வெளிக்காட்டுகிறாரோ தெரியவில்லை.

இதில் ராகவா லாரன்ஸின் புதிய அவரத்தை பார்க்கலாம். இந்த படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனின் இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அது மட்டுமல்ல இந்த படத்தின் கடைசி 40 நிமிடங்கள் நிச்சயம் உங்கள் இதயங்களை கொள்ளையடிக்கும்’ என்று தனது விமர்சனத்தை பதிவிட்டு இருக்கிறார்.

Also Read: ஹீரோவாக என்ட்ரி கொடுத்த ராகவா லாரன்ஸின் சொந்த தம்பி.. பவர்ஃபுல்லாக இணைந்த கூட்டணி

இதே போன்று இன்னும் நிறைய பிரபலங்கள் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை குறித்து பாசிட்டிவ் என விமர்சனங்களை பதிவிடுகின்றனர். இந்த வருட தீபாவளி கிளாஸில் எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துடன் இன்று கார்த்தியின் ஜப்பான் மற்றும் விக்ரம் பிரபுவின் ரெய்டு உள்ளிட்ட படங்களும் ரிலீஸ் ஆகி நேருக்கு நேர் மோதிக் கொள்கிறது.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் விமர்சனத்தை அளித்த தனுஷ்

Dhanush-twit-cinemapettai
Dhanush-twit-cinemapettai

Trending News