தனுஷ் தன்னுடைய Directorial அவதாரத்தில் நான்காவது படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இட்லி கடைபடம் தேனியில் செட் அமைத்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தனுஷ்க்கு ஏற்பட்ட உடல்நிலை கோராறு காரணமாக சென்னை திரும்பி உள்ளார்.
இட்லி கடை படத்தில் உயிரை பனையம் வைத்து ஒரு காட்சியில் நடித்துள்ளார். சக நடிகர்கள் மற்றும் ஸ்டண்ட் கலைஞர்கள் அனைவரும் தனுஷிடம் வேண்டாம் என்று சொல்லியும், தான் இயக்கும் படத்தில் அப்படி செய்வது நியாயம் இல்லை என்று தானே இறங்கி சிக்கலில் மாட்டியுள்ளார்.
வீடு எரிகிற மாதிரி படத்தில் ஒரு காட்சி. அதற்கு தனுஷ் டூப் போடாமல் அந்த புகை மண்டலத்துக்குள் நடித்திருக்கிறார். அந்த புகை மூட்டத்துக்குள் எதையோ தேடுவது போன்ற காட்சி அது. இதனால் அவர் உடலுக்கு ஒத்துக்காமல் அங்கேயே நிலை தடுமாறி விழுந்துள்ளார்.
தனுசுக்கு ஏற்கனவே டஸ்ட் அலர்ஜி இருக்கிறதாம். இருந்தும் கூட அந்த புகை காட்சியில் நடித்ததால் அவருக்கு மேலும் ஒவ்வாமை தொற்றிக் கொண்டது. இதனால் படப்பிடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். சென்னையில் இரண்டு நாட்கள் மட்டுமே ஓய்வு எடுத்து உள்ளார்.
இட்லி கடை படம் 70% முடிந்து விட்டது. இன்னும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் மட்டும் இருக்கிறது. இதனால் தேனியில் அந்த செட்டை கலைக்காமல் இன்னும் வைத்திருக்கிறார்கள். தற்பொழுது தனுஷ் வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார். புத்தாண்டுக்கு பின் மீண்டும் படபிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.