புதன்கிழமை, ஜனவரி 15, 2025

முழுநேர ஹாலிவுட் ஹீரோவாக செட்டிலாக போகும் தனுஷ்.. முக்கிய அறிவிப்பால் திணறும் கோலிவுட்

தமிழ் திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையால் வளர்ந்து வந்த தனுஷ் தற்போது பாலிவுட், ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரபலமாக இருக்கிறார். தமிழில் படங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் அவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படத்தில் சிறிது நேரமே வந்திருந்தாலும் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் அதிக அளவில் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் பட குழு இந்த படத்தை வைத்து இந்தியாவில் கோடிக்கணக்கில் காசு பார்த்து விட்டனர். அதற்கு முக்கிய காரணம் தனுஷ் மட்டும் தான். அவரை முன்னிலைப்படுத்தி தான் அதிக அளவு பிரமோஷன் செய்யப்பட்டது. இதன்மூலம் தனுஷின் செல்வாக்கும் உலக அளவில் உயர்ந்து விட்டது.

அது மட்டுமல்லாமல் படக்குழுவினருக்கும் நிறைய லாபம் கிடைத்தது. இதனால் அவர்கள் தனுஷை விடாமல் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் புக் செய்து விட்டனர். அந்த வகையில் விரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இதை தனுஷ் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இந்த படத்தில் லோன் உல்ப் என்ற கதாபாத்திரத்தில் 10 நிமிடம் மட்டுமே நடித்திருந்த தனுஷ் அடுத்த பாகத்தில் கிட்டத்தட்ட முதல் பாதி முழுக்க வர இருக்கிறாராம். இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியே போனால் தனுஷ் ஹாலிவுட் பக்கமே செட்டில் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு தனுஷின் மார்க்கெட் தற்போது உயர்ந்து கொண்டே இருக்கிறது. இது அவரின் ரசிகர்களையும் குஷிப்படுத்தி உள்ளது. விரைவில் தனுஷின் அதிரடி ஆட்டத்தை தி கிரே மேன் 2 வில் நாம் காணலாம்.

Trending News