திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

தனுசுக்கு பிறந்த நல்ல காலம்.. நாளா பக்கமும் விரித்த வலை, கர்ணன் பட கூட்டணியில் மீண்டும் ஒரு படம்

Dhanush Good Opportunity: தனுசை பார்க்க தான் இப்படி ஒல்லியா இருக்கிறார், ஆனால் செய்ற வேலைகள் எல்லாம் வெறித்தனமாக இருக்கிறது. பொதுவாக முன்னணி நடிகர்கள் ஒரு படத்தின் படபிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும் பொழுது தான் அடுத்த படத்திற்கான இயக்குனரை கமிட் செய்வார். ஆனால் தனுஷோ தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பை கமிட் பண்ணி கிட்டத்தட்ட பத்து படங்களை கையில் வைத்துக் கொண்டு தான் சுற்றி வருவார்.

இந்தாண்டு வெளிவந்த வாத்தி படத்திற்கு பிறகு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தை நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வருகிற பொங்கல் அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகப்போகிறது. இப்படத்திற்கு பிறகு தனுஷ் ஐம்பதாவது படத்தை அவரை இயக்கி நடிக்க போகிறார்.

இதற்கான பணியும் ஒரு பக்கத்தில் தொடங்கி விட்டாச்சு. அடுத்ததாக வெற்றிமாறனுடனும் ஒரு படம் பண்ணுவதாக தகவல் வெளியாயிருக்கிறது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் அல்லது புதிய கதையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் இளையராஜாவின் பயோபிக்ளும் தனுஷ் ஒரு சம்பவத்தை செய்யப் போகிறார்.

Also read: தொட்டதெல்லாம் பொன்…! சின்ன மீனை போட்டு தனுஷ் பிடித்த 4 சுறாக்கள்

இப்படி நிக்க கூட நேரம் இல்லாத அளவிற்கு கோலிவுட்டில் பிஸியாக வலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது கர்ணன் பட கூட்டணியிலும் மீண்டும் இணையப் போகிறார். இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பித்து சமூக வலைதளங்களில் தனுஷ் அவருடைய பதிவிட்டை போட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர்கள் கூட்டணியில் நடிக்கப் போவதை உறுதி செய்யும் வகையில் மாரி செல்வராஜுக்கு அட்வான்ஸ் தொகையை கொடுத்திருக்கிறார்.

காரணம் மாரி செல்வராஜ் கூட்டணியில் தனுஷ் நடிக்கப் போகும் படத்தை இவரை தயாரிக்கப் போகிறார்.  அது மட்டுமில்லாமல் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் மறுபடியும் இன்னொரு படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால், அதற்காகவும் அட்வான்ஸ் பணத்தை கொடுத்ததாக தகவல் வெளியாயிருக்கிறது.

இப்படி தனுஷ் முன்னணி இயக்குனர்களுக்கு நாளா பக்கமும் வலை விரித்து விட்டார். இனிமேல் இவர் காட்டுல அடை மழை தான் என்பதற்கு ஏற்ப கிட்டதட்ட 10 படங்களில் நடிப்பதற்கான கதையை தேர்வு செய்து இயக்குனரிடமும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார். மேலும்  வொண்டர் பார் ப்ரொடக்ஷன் கம்பெனிக்கு நியூமராலஜி பார்த்து மீண்டும் பெயரை மாற்றி வைக்கப் போகிறார்.

Also read: போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகிய ஹிட்டான 5 படங்கள்.. சிம்பு, தனுஷ் யுத்தத்திற்கு நடுவே வந்த வாரணம் ஆயிரம்

Trending News