செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024

ஆஸ்கார் நாயகனுக்கு சரியான நேரத்தில் உதவிய தனுஷ்.. எல்லா படத்திலும் இவருக்கு இது வேலையா போச்சு!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இன்னிலையில் தனுஷ் நடிக்கும் இந்தி திரைப்படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைத்து கொண்டிருக்கிறார். இந்தப்படத்திற்கு பாடலாசிரியர் கபிலன் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார். தற்போது ஏஆர் ரகுமான் துபாயில் நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் பிஸியாக இருக்கிறார்.

எனவே பாடலாசிரியர் கபிலனுக்கு, ஏஆர் ரகுமானால் சுச்சுவேஷன் சொல்ல முடியவில்லை. இதனால் பெரும் கவலையில் இருந்த படக்குழுவினருக்கு தனுஷ் சரியான நேரத்தில் உதவி செய்துள்ளார்.

ஏனென்றால் ஏஆர் ரகுமான் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதை யோசித்து, கபிலனுக்கு தனுஷ் சுச்சுவேஷன் சொல்லி பாடலை எழுத உதவி புரிந்துள்ளார். இதனால் படமும் காலதாமதம் இல்லாமல் எடுக்கப்பட்டதாம்.

இதேபோன்றுதான் தனுஷ் நடிக்கும் மற்ற படங்களிலும் ஏதாவது பிரச்சனை வந்தால், அதற்கு முதல் ஆளாக போய் நின்று அந்தப் பிரச்சனையில் தலையிட்டு, அவரால் என்ன செய்ய முடியுமோ அந்த உதவியை செய்து பிரச்சினையை தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தனுஷ் நடிப்பது மட்டுமல்லாமல் அவருடைய படங்களில் அதிக ஈடுபாடுடன், படத்தில் எல்லாவுமாய் இருந்து செயல்படுவது, திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே எக்கசக்கமான பாராட்டுக்கள் வந்து குவிகிறது.

Trending News