புதன்கிழமை, அக்டோபர் 30, 2024

டபுள் மடங்கு சம்பளத்தை உயர்த்திய தனுஷ்.. தலையில் துண்டை போடும் நிலைமையில் தயாரிப்பாளர்கள்

Dhanush hike his salary in double for upcoming films: ஆரம்ப காலத்தில் தான் சம்பாதித்த அவமானங்களை வெகுமதிகளாக்கி இன்று நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையோடு தன்னிகரில்லாத தலைவனாக உருவெடுத்து வருகிறார் தனுஷ். தொடர்ந்து பான் இந்தியா மூவியாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தனுஷ்.

தொடக்கத்தில் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களாக மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் தற்போது சமூக அக்கறையுடன் ரசிகர்களுக்கு கருத்து சொல்லும் தனித்துவமான திரைக்கதையுடன் உள்ள படங்களை செலக்ட் செய்து முன்னணி நடிகராக உயர்ந்து உள்ளார்.

கேப்டன் மில்லர் படத்தின் வெற்றிக்கு பின் 49 படங்களை நிறைவு செய்து இருக்கும் நடிகர் தனுஷ், தனது 50வது திரைப்படத்தை தானே இயக்குவதாக உள்ளார். மேலும் தன் மருமகன் நடிக்கும் “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ்.

Also read: நிற்காமல் ஓடும் பந்தயக்குதிரை.. அடேங்கப்பா! தனுஷ் கைவசம் இத்தனை படங்களா

இதற்கிடையே  இயக்குனர் சேகர் கம்லா உடன் ஒரு பான் இந்தியா மூவியிலும், துணிவு படத்தின் இயக்குனர் ஹச் வினோத்துடன் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார் தனுஷ். இப்படி அசுர வேகத்தில் நடித்துவரும் இந்த அசுரனுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ரசிகர்கள் அதிகம்.

சமீப காலங்களில் வெளிவந்த வாத்தி, திருச்சிற்றம்பலம், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெறவே, வசூலில் 200 கோடி கிளப்பில் அசால்டாக இணைந்து அசர வைத்தார் தனுஷ். மேலும் இவரது சமீபத்திய படங்களுக்கும் சாட்டிலைட் உரிமைகளும் நல்ல விலைக்கு போய்க் கொண்டிருக்கின்றது.

அது மட்டும் இன்றி தனுஷின் படங்களில் அறிமுகத்தை கொடுத்து அவர் வளர்த்து விட்டு தற்போது முன்னணியில் இருக்கும் சிவகார்த்திகேயன் கூட படத்திற்கு படம் ஐந்து கோடி என சம்பளத்தை உயர்த்தும் போது நான் மட்டும் என்ன சும்மாவா? என்று ஆதங்கப்படுகிறார் தனுஷ்.

இதனால் தற்போது 25 முதல் 30 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் தனுஷ் திடீரென 40 கோடியிலிருந்து 60 கோடி வரை சம்பளம் கேட்டு தயாரிப்பாளரை திக்கு முக்காட வைத்துள்ளாராம். கூட்டி கழிச்சு பார்க்கும் போது தலையில் துண்டை போடும் நிலைமையில் இருக்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

Also read: திருப்பதியில் இருந்து துரத்தி விடப்பட்ட தனுஷ் படப்பிடிப்பு.. விசுவாசிகள் செய்த வேலையால் வந்த விளைவு

- Advertisement -spot_img

Trending News