Kamal : மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் நாயகன் படத்திற்குப் பிறகு உருவாகிறது தக் லைஃப். இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்க காரணம் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடிக்கிறார். ஆரம்பத்தில் இப்படம் ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்போது ரிலீஸ் தேதியில் இருந்து தக் லைஃப் படம் பின்வாங்கி இருக்கிறது. அதாவது அடுத்த வருடம் ஜூன் 5ஆம் தேதி தான் தக் லைஃப் படத்தை வெளியிட உள்ளனர். இதற்கு சில காரணங்களும் சொல்லப்படுகிறது. அதாவது கமல் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான படம் விக்ரம்.
இந்த படம் ஜூன் மாதம் தான் வெளியாகி இருந்தது. ஆகையால் சென்டிமென்ட் ஆக தக் லைஃப் படத்தையும் ஜூன் மாதம் வெளியிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் ஏப்ரல் மாதத்தில் மற்ற மொழிகளில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது.
தக் லைஃப் ரிலீஸ் மாற்றதால் தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்
எனவே தக் லைஃப் படத்தின் ஓவர் சீசில் பிரச்சனை வரும் என்பதால் இந்த முடிவை எடுத்து இருக்கின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் இட்லி கடை பட குழுவினர். ஏனென்றால் அப்போதைக்கு தமிழில் பெரிய அளவுக்கு போட்டி இருக்காது.
தக் லைஃப் உடன் வெளியிட்டால் பெரிய லாபம் பார்க்க முடியாது. அதன் பிறகும் பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்த வருடம் வரிசை கட்டி நிற்கிறது. இப்போது தக் லைஃப் தாமாக முன்வந்து ரிலீஸ் தள்ளி போட்டதால் அதை தனுஷ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.
ஆகையால் எதிர்பார்த்தது போல் இட்லி கடை படம் நல்ல லாபத்தை ஏப்ரல் மாதம் வெளியிட்டால் பெரும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருக்கிறது. மேலும் சிம்புவின் படம் வெளியாகி பல மாதங்கள் ஆன நிலையில் தக் லைஃப் படத்திற்கு காத்திருந்த நிலையில் ரிலீஸ் தள்ளி போனது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.