ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய தனுஷ்.. பெரிய மனுஷனாய் நடக்க தவறிய மோசமான செயல்

தனுஷ் சினிமாவிற்கு நடிக்க வந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகிவிட்டது. ஆரம்பத்தில் பல கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான அவர் இன்று பாலிவுட், ஹாலிவுட் என்று கலக்கி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் தான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு தன்னுடைய அண்ணன் செல்வராகவன் மற்றும் அப்பா கஸ்தூரிராஜா, குடும்ப உறுப்பினர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் அனைவரும் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து இருந்தார்.

இவ்வளவு பேருக்கு நன்றி சொல்லிய அவர் சினிமாவில் அவரை ஏற்றிவிட்ட ஏணியாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை அவர் ரஜினியைப் பற்றி சொல்வதற்கு மறந்து விட்டாரா அல்லது மறைத்து விட்டாரா என்று தெரியவில்லை.

தனுஷ் அவரின் திருமணத்திற்கு முன்பு நிறைய படங்களில் நடித்திருந்தாலும், ரஜினியின் மருமகனான பிறகுதான் அவருடைய அந்தஸ்து உயர்ந்தது என்று சொல்லலாம். அவர் இப்பொழுது பாலிவுட் வரை சென்றுள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணமும் ரஜினியின் மருமகன் என்பது தான்.

மேலும் தனுஷ், ரஜினியை போல் எளிமையாக இருப்பது என்று பல விஷயங்களிலும் அவரையே பின்பற்றி வந்தார். குறிப்பாக எல்லா மேடைகளிலும் அவர் ரஜினியைப் பற்றி பெருமையாக புகழ்ந்து பேசியிருக்கிறார். அப்படி இருந்த அவர் இந்த நன்றி உரையில் அவர் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை.

இதிலிருந்து அந்த குடும்பத்தில் என்னதான் நடக்கிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. என்னதான் மனஸ்தாபம் இருந்தாலும் பொதுவெளியில் தனுஷ் இப்படி செய்தது பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஜினியின் ரசிகர்கள் தனுஷின் இந்த செயலை பார்த்து கடுமையான கோபத்தில் இருக்கின்றனர்.