சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

வருமா வராதா? என்னாச்சு இளையராஜா பயோ பிக்.. பாதியிலேயே கை கழுவினாரா தனுஷ்?

தனுஷ் தற்போது இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.. படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ் இயக்கும் நான்காவது திரைப்படம் தான் இட்லி கடை. தனுஷுடன் இணைந்து இப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் என பலர் நடித்து வருகின்றனர்.

பீல் குட் படமாக உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. இதையடுத்து விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிடையில் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.

மேலும், பிரகாஷ் ராஜை வைத்து ஒரு புதிய படம் இயக்கம் நோக்கத்திலும் தனுஷ் இருக்கிறார் என்று சினி வட்டாரங்களில் கூற படுகிறது. அதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக கமிட் ஆகவும் வாய்ப்புள்ளது. தான் நடிக்கும் படங்கள் மட்டுமல்லாது, மற்றவர்கள் நடிக்கும் படங்களை இயக்கவும் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார்.

வருமா வராதா?

இந்த நிலையில் பயங்கர பிசியாக இருக்கும் நடிகர் தனுஷ், இளையராஜா பயோ பிக்கில் நடிப்பதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் அந்த படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வருவதில்லை. இதை தொடர்ந்து, படம் வருமா வராதா என்று ரசிகர்கள் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர்.

பீல் குட் படமாக உருவாகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது.
இதையடுத்து விரைவில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அநேகமாக டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு துவங்க மேலும் சில மாதம் எடுக்குமாம்.

தற்போது தனுஷ் நடித்து இயக்கி வரும் படங்களின் வேலைகளை முடித்துக்கொண்டு தான் இளையராஜா பயோ பிக்கில் நடிக்கவுள்ளாராம் தனுஷ். இப்படி தாமதமாகி கொண்டே வருவதனால், தனுஷ் பாதியிலேயே கை கழுவ நினைக்கிறாரா என்ற கேள்வியும் ஒரு சிலர் முன்வைத்து வருகின்றனர்.

Trending News