அஜித், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களுக்கு அடுத்தபடியாக இருப்பது தனுஷ் தான். யார் என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும் நான் என் வேலையை கரெக்டாக செய்கிறேன் என தொடர்ந்து பேயாட்டம் ஆடி வருகிறார் இந்த அசுரனாகிய தனுஷ்
இப்பொழுது மூன்று விஷயங்களால் அவர் சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறார். இந்த 2025 ஆம் ஆண்டு தனக்குத் தான் என்பது போல் பல படங்களில் கமிட்டாகி அசத்தி வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ராயன் அதுவும் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
தற்போது தனுஷ் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அது இரண்டுமே முடியும் தருவாயில் இருக்கிறது. இதனால் அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார். பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியும் உள்ளார். தற்சமயம் தமிழில் மூன்று படங்களை எதிர்பார்த்து இருக்கிறார்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: தனுஷ் இயக்கி வரும் இந்தப் படம் முழுவதுமாக முடிந்து விட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் ரிலீஸ் தேதியை தனுஷ் தரப்பிலிருந்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இட்லி கடை: தனுஷ் இயங்கி வரும் தன்னுடைய நான்காவது படமான இட்லி கடையும் முடியும் தருவாயில் இருக்கிறது. இது பிப்ரவரி மாசம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக குபேரன் படத்தின் ரிலீஸுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.