தமிழ் சினிமாவிலிருந்து ஹாலிவுட் வரையில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். அடுத்ததாக அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய ரஷ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் த கிரே மேன் என்ற படத்தில் நடிக்க ஹாலிவுட் பறந்துவிட்டார்.
இந்நிலையில் தனுஷ் மற்றும் மாரிசெல்வராஜ் கூட்டணியில் உருவான கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது அனைவரும் அறிந்ததே. கர்ணன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் கூட இன்று மாலை வெளியாக உள்ளது.
அதேபோல் தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகிய பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் தான் ஜகமே தந்திரம். அதிரடி கேங்க்ஸ்டர் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.
மேலும் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற ரகிட ரகிட என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது. இந்நிலையில் ரசிகர்களின் தலையில் குண்டைத் தூக்கிப் போடும் விதமாக ஜகமே தந்திரம் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாக செய்திகள் வெளிவந்தன.
ஜகமே தந்திரம் படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகுமார் என்பவர் தயாரித்திருந்தார். முதலில் தியேட்டர் ரிலீஸ் என கூறிவிட்டு பின்னர் ஓடிடியில் நல்ல லாபம் கிடைத்ததால் அங்கே சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து தனுஷும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஜகமே தந்திரம் படத்தை பற்றி கூறியிருந்தார்.
அதெல்லாம் முடிந்த கதை. தற்போது ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆறு மொழிகளில் கிட்டத்தட்ட 200 நாட்களுக்கு மேல் வெளியாக உள்ளதாம். ஏற்கனவே தனுஷுக்கு ஹாலிவுட் அடையாளம் இருக்கும் நிலையில் ஜகமே தந்திரம் திரைப்படம் கண்டிப்பாக அவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என சமாதானப்படுத்தி வைத்துள்ளாராம் தயாரிப்பாளர்.