தமிழ் சினிமா உலகமே அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டருக்கு மிகப்பெரிய ரசிகர்களை இழுக்கும் வல்லமை கர்ணன் படத்திற்கு தான் உள்ளது என கூறி வருகின்றனர்.
பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கர்ணன். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
முன்னதாக கர்ணன் படத்தில் இருந்து வெளியான பண்டாரத்தி புராணம், கண்டா வர சொல்லுங்க போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி விட்டது.
இந்நிலையில் விரைவில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாக போவதாக தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மிரண்டு போனதாக பிரபல நடிகர் ஒருவர் கூறியுள்ளது ரசிகர்களை வெறியேற்றியுள்ளது.
தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் லால். பிரபல மலையாள நடிகரான இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களிலும் மிரட்டி இருந்தார். குறிப்பாக சண்டக்கோழி, காளை போன்ற படங்களில் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் கர்ணன் படத்தை முழுவதுமாக பார்த்து விட்டதாகவும், படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு மிரண்டு விட்டதாக கூறிய லால், கண்டிப்பாக கர்ணன் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என உறுதி கொடுத்துள்ளார். இது தனுஷ் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. கர்ணன் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.