வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பஸ்ஸ்டாப்பில் கதை பேசும் தனுஷ் மற்றும் ராஷி கண்ணா.. கசிந்த திருச்சிற்றம்பலம் படப்பிடிப்பு புகைப்படம்

கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் என்ற படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் என்பவர் இயக்கி வருகிறார்.

மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை விட இந்த படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் என மூன்று நடிகைகள் நடிக்கின்றனர்.

மேலும் பிரகாஷ் ராஜ் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சமீபகாலமாக முன்னணி நடிகர்கள் மற்றும் பெரிய இயக்குநர்கள் படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் வெளியாகி படக்குழுவினர் அதிர்ச்சியாக்கி வருகிறது.

அந்த வகையில் தனுஷ் நடித்துவரும் திருச்சிற்றம்பலம் படத்தில் பஸ் ஸ்டாப்பில் ராசி கண்ணா மற்றும் தனுஷ் இருவரும் பேசிக் கொண்டிருப்பது போல காட்சி எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதே போல் தான் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வந்த காத்துவாக்குல ரெண்டு காதல், மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் ஆகிய படப்பிடிப்பு தளங்களில் இருந்து புகைப்படங்கள் வெளியாகின.

thiruchitambalam-shooting-spot-photo
thiruchitambalam-shooting-spot-photo

Trending News