சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

இருந்து என்ன பிரயோஜனம்.. ரஜினி மகளை அசிங்கப்படுத்திய தனுஷ், விவேக் என்ன பண்ணினார் தெரியுமா?

Dhanush: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து ஆகிவிட்டது.

இந்த நிலையில் திருமணம் ஆன ஒரு சில வருடங்களிலேயே தனுஷ் நிறைய மேடைகளில் ஐஸ்வர்யாவை மட்டம் தட்டி பேசி இருக்கிறார்.

அந்த மாதிரியான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றன.

ரஜினி மகளை அசிங்கப்படுத்திய தனுஷ்

அதில் ஒரு வீடியோவில் விவேக் முன்னாடியே தனுஷ் தன்னுடைய மனைவியை மட்டம் தட்டி பேசி இருக்கிறார்.

விவேக் மற்றும் தனுஷ் இணைந்து நடித்த படம் தான் படிக்காதவன். இந்த பட பிரமோஷனுக்காக இருவரும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்லுவாங்க என்று சொல்கிறார்.

அவர் பேச்சை பாதியிலேயே நிப்பாட்டி தனுஷ் இது என்ன இது கஷ்டப்பட்டு நடிக்கிறது நான். கஷ்டப்பட்டு கையை கால கட்டி டான்ஸ் ஆடி, நடிச்சு வெற்றி பெறுகிறேன்.

நீங்க ஈசியா வெற்றிக்கு பின்னாடி பொண்ணு இருக்காங்கன்னு சொல்றீங்களே. பின்னாடி இருந்து என்ன பிரயோஜனம் என்று சொல்கிறார்.

மறைந்த நடிகர் விவேக்குக்கு தனுஷ் பேசுவது சரியாக படவில்லை. ரஜினி பெண்ணே தான் மறைமுகமாக பேசுகிறார் என்று தெரிந்து விவேக் அதற்கு பதில் எதுவுமே சொல்லாமல் சிரித்து மழுப்புகிறார்.

இந்த வீடியோ தான் இப்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

Trending News