வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அங்க போறீங்களா என வெற்றிமாறனுடன் மல்லு கட்டிய தனுஷ்.. வேறு வழி இல்லாமல் தொடங்கும் 2-ம் பாகம்

அண்மையில் நம் தமிழ் சினிமாவின் இயக்குனர்கள் பலர் வேறு மொழிகளுக்கு சென்று படங்களை இயக்கி வருகின்றனர். உதாரணமாக இயக்குனர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராமச்சரனுடன் இணைந்து படம் இயக்கி வருகிறார்.மேலும் இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் சென்று ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதனிடையே இந்த வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன் களமிறங்கியுள்ளார்.

தற்போது இயக்குனர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை மும்முரமாக இயக்கி வருகிறார். அடுத்தப்படியாக சூர்யாவின் வாடிவாசல், வடசென்னை 2 படங்களை இவர் இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில், தற்போது தெலுங்கு பக்கமாக சென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மெகாஹிட்டான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன்.

Also Read: அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

இதன் காரணமாக தற்போது தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தது. ஏனென்றால் வெற்றிமாறன், தனுஷின் வடசென்னை 2 படத்தை விடுதலை படத்திற்கு பின் இயக்குவதாக கூறினார். ஆனால் தற்போது வெற்றிமாறன் எடுத்துள்ள முடிவு தனுஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தனுஷை சமாதானப்படுத்தும் நோக்கத்தில் வெற்றிமாறன் பிளான் செய்துள்ளார்.

அதாவது ஜூனியர் என்.டி.ஆரிடம் 3 கதைகளை கூறிய வெற்றிமாறன், அதில் ஒருகதையை மட்டும் அவர் தேர்ந்தெடுத்துள்ளாராம். இந்த கதையை இரண்டு பாகங்களாக எடுப்பதாகவும், முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் முதன்மை கதாபாத்திரத்திலும், இரண்டாம் பாகத்தில் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்த நிலையில், வெற்றிமாறன் குஷியில் உள்ளாராம்.

Also Read: மாஸ் ஹீரோவை சந்தித்து ஒன் லைன் ஸ்டோரி கூறிய வெற்றிமாறன்.. செம கடுப்பில் தனுஷ்

பொதுவாக வெற்றிமாறனின் படங்கள் மற்றும் அவருடைய பேச்சுகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். ஆனால் தற்போது தெலுங்கு தேசத்திற்கு சென்று அங்குள்ள ஹீரோவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார் வெற்றிமாறன். இதற்கு அங்கு வெற்றிமாறனின் சம்பளம் இரட்டிப்பாக அதிகரித்து கொடுக்கப்படுவது காராணமாம்.

இதற்கு முன்பு வரை தமிழ் தான் முக்கியம் என கூறிவந்த வெற்றிமாறன், சம்பள உயர்வுக்காக தன்னை வளர்த்த தமிழ் மொழி சினிமாவை விட்டுவிட்டு செல்கிறார் என அவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகிறது. மேலும் தனுஷ் மட்டும் தான் வெற்றிமாறனின் கண்ணுக்கு தெரியும் நடிகரா என்றும் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Also Read: சிம்புவுடன் நேருக்கு நேராக மோதும் சூரி.. தேவையில்லாமல் கோர்த்து விடும் வெற்றிமாறன்

Trending News