புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தனுஷ் மட்டும் இல்ல.. மலையாளத்திலும் கெத்துக் காட்டிய நயன்தாரா.. ஆனா இப்படி ஆகிருச்சே


தனுஷ் மீதான விவகாரம் மட்டுமல்ல நயன்தாரா மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமணத்தை வைத்து உருவாக்கப்பட்ட ஆவணப் படம் தி ஃபேரி டேல். இதில் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவாகக் காரணமாக நானும் ரவுடிதான் படத்தின் கிளிப்பிங்ஸ் சேர்க்கப்பட்டது.

இந்த டாகுமெண்டரி ரிலீஸாகும் முன், தனுஷ் மீது குற்றச்சாட்டை முன் வைத்து நயன்தாரா ஒரு அறிக்கை வெளியிட்டார். இதில் தனது வாழ்க்கை ஆரம்பமான நானும் ரவுடிதான் பட காட்சிகளை யூஸ் பண்ண தனுஷ் அனுமதி தரவில்லை. அதற்கு ஈடாக நஷ்ட ஈடு கேட்டதாக தெரிவித்தார்.

இத்தனை நடந்தும் தனுஷ் இதுவரை பொதுவெளியில் பேசவில்லை. டாகுமெண்டரியில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் பட கிளிப்பிங்ஸ் இடம்பெற்றது. அதனால் தனுஷ் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்குப் பதில் அளிக்கும்படி நயன்தாராவுக்கு உத்தரவிடப்பட்டது.

கேரளாவில் நயன்தாரா மீது 2 வழக்குகள் நிலுவை – பயில்வான் ரங்கநாதன்

இவ்விவகாரம் பற்றி பயில்வான் ரங்கநாதன் பிரபல யூடியூப்க்கு பேட்டியளித்தார். அதில்,’’ கேரளாவில் நயன்தாராவின் மீது வழக்குகள் நிலுவைகள் உள்ளன. அவரது அழகு சாதன பொருட்கள், நாப்கின் உள்ளிட்டவை தரமாக இல்லை. ஐஎஸ்ஐ முத்திரை இல்லை என சமூக ஆர்வலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதேபோல், பிரபல இசை ஆல்பத்தின் வந்த மியூசிக்கை நயன்தாரா, விளம்பரத்திற்கு யூஸ் பண்ணியுள்ளார். உரிமையாளரிடமும் என்.ஓ.சியை அவர் பெறவில்லை. எனவே அந்த இசை ஆல்பத்தின் ரைட்ஸ் வைத்துள்ளவர்கள், அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.’’ என்று தெரிவித்தார்.

தனுஷ் மீது குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வரும் நயன்தாரா மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது என ரங்கநாதன் கூறியுள்ளார். இது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News