செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அண்ணனின் கேரியரை சரிசெய்ய துடிக்கும் தனுஷ்.. மீண்டும் கை கொடுக்குமா இந்த கூட்டணி

நடிகர் தனுஷ் இன்று சினிமாவில் மறுக்க முடியாத நடிகராக வளம் வந்து கொண்டிருக்கிறார். என்னதான் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகள் வந்தாலும் நடிப்பை என்றுமே தனுஷ் விட்டுக்கொடுத்ததே இல்லை. அதற்கான ஊதியமாக தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை அள்ளி வருகிறார்.  2025 வரை பட லிஸ்டுகளை தன் கையில் வைத்துள்ள தனுஷின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை இப்படி எல்லாம் இல்லை.

அவரது உருவத்தை வைத்து கேலி, கிண்டல் செய்த அனைவரையும் தன் நடிப்பின் மூலமாக கட்டிப்போட்டவர். இப்படிப்பட்ட தனுஷின் வாழ்க்கையை மாற்றி அமைந்தவர் தான் இயக்குனர் செல்வராகவன். தனுஷின் அண்ணனாக இவர் இருந்தாலும், வேலை என்று வந்தால் தம்பி என்ற பாசத்தை எல்லாம் தூக்கிப்போட்டு விடுவார் செல்வராகவன்.

Also Read: 4 டாப் ஹீரோக்களுடன் இயக்கிய நடிக்கப் போகும் தனுஷ்.. மரண மாஸாக வெளிவந்த அடுத்த பட டைட்டில்

இயக்கத்தின் மீது அதிக ஆர்வம் கொண்ட செல்வராகவன் பல வருடங்கள் கழித்து ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக விஜயின் பீஸ்ட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் தோல்வியானதால் செல்வராகவனின் நடிப்பும் பேசப்படவில்லை. அதன் பின்பு தனுஷின் நடிப்பில் நானே வருவேன் என்ற த்ரில்லர், மாஸ் பாடத்தை இயக்கி வெற்றியை கொடுத்தார்.

இந்த வெற்றியை கைப்பற்றிக்கொண்டு தனது அடுத்த திரைப்படங்களில் தனுஷின் நடிப்பில் இயக்கலாம் என முடிவு செய்துள்ளார். அதன்படி 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை திரைப்படத்தின் பாகம் 2 எடுக்க பல வருடங்களாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தனுஷால் அந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போகவே , அந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Also Read: 2025 வரை பிஸியாக இருக்கும் வாத்தி தனுஷ்.. அடுத்தடுத்த வரிசை கட்டி நிற்கும் 5 படங்கள்

இதனிடையே தற்போது தன் அண்ணனை கைதூக்கி விடலாம் என்ற முயற்சியில் தனுஷ் ஈடுபட்டு வரும் வகையில், புதுப்பேட்டை 2 படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார். தெலுங்கு இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள வாத்தி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே தன் அண்ணனுடன் மீண்டும் 6 வது முறையாக இணைய தனுஷ் முடிவு செய்துள்ளார். புதுக்கோட்டை படம் ரிலீசான போது அந்த சமயத்தில் இப்படம் பெரிதும் வரவேற்கப்படாமல் இருந்தது. ஆனால் காலங்கள் மாற, மாற செல்வராகவனின் இயக்கம் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் கண்டிப்பாக புதுக்கோட்டை 2 படம் தரமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.

Also Read: 3 கதைகளை வைத்துக்கொண்டு சுத்தும் ஹெச்.வினோத்.. தனுஷ் உடனே ஓகே சொல்லிய கதை

Trending News