புதன்கிழமை, ஜனவரி 8, 2025

நடக்க கூடாதுன்னு நினைத்ததை பிள்ளையார் சுழி போட்ட இளையராஜா.. தனுஷ் பிரண்டுக்கு காட்டிய பச்சக்கொடி

Illayaraja – Dhanush : இளையராஜாவின் இசை மட்டும் இல்லை என்றால் பலரின் வேதனையை போக்க வேறு வழியே இருக்காது. ஏனென்றால் இன்றளவும் இளையராஜாவின் பாடலை கேட்டுவிட்டு தான் பலர் இரவு தூக்கத்திற்கு செல்கிறார்கள். இந்நிலையில் இசைஞானியின் வாழ்க்கை வரலாற்றை பயோபிக் படமாக எடுக்க உள்ளனர்.

ஆரம்பத்தில் பால்கி இந்த படத்தை இயக்குவதாக இருந்த நிலையில் இளையராஜா வேண்டாம் என்று கூறிவிட்டாராம். மேலும் தனுஷ் இந்த படத்தில் இளையராஜாவாக நடிக்க உள்ளதால் அவர் தன்னுடன் பணியாற்றிய இரண்டு இயக்குனர்களை சிபாரிசு செய்துள்ளார்.

அதாவது கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ், சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஆகியோரை சிபாரிசு செய்தார். இந்நிலையில் இளையராஜா இருவரிடம் பேசிய நிலையில் அருண் மாதேஸ்வரனை தேர்வு செய்திருக்கிறாராம்.

Also Read : சிவகார்த்திகேயனால் லலித்துக்கு வந்த ஆப்பு.. அடம்பிடித்து கறாராய் தனுஷ் செய்யும் அக்கப்போரு!

அதிரடி காட்சிகள் அருண்மாதேஸ்வரனுக்கு கைவந்த கலை. தனுஷ் உடன் பணியாற்றி உள்ளதால் மீண்டும் இவர்கள் இணைவதால் சுமூக உறவு இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதோடு இளையராஜா அருண் மாதேஸ்வரனை தன்னுடன் இரண்டு மாதம் பயணிக்க சொல்லியிருக்கிறாராம்.

அதன் பிறகு அவர் கதை எழுத உள்ள நிலையில் இளையராஜாவின் பயோபிக் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. படம் ஆரம்பிக்கவே கூடாது என பலர் நினைத்த நிலையில் தற்போது இளையராஜா பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார். அதுவும் தனுஷ் பட இயக்குனருக்கு இந்த வாய்ப்பு கொடுத்தது மிகவும் மகிழ்ச்சி தரும் ஒன்றாக தான் அமைந்துள்ளது.

Also Read : தனுஷ் போட்ட தூண்டிலை டம்மி ஆக்கிய இளையராஜா.. 2 அம்புகளை விட்டும் கேடயத்தை தூக்கி தடுத்து வீசிய இசைஞானி

Trending News