செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சிவப்பு ரோஜாக்கள் 2ம் பாகத்தை ரீமேக் செய்ய துடிக்கும் தனுஷின் இயக்குனர்! வாய்ப்பை தட்டி தூக்கிய பிரபலம்!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிகம் படங்கள் கைவசம் வைத்திருக்கும் ஹீரோக்களில் தனுஷ் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கிறார். தமிழ், ஹிந்தி என தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

எனவே தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர காத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன். இதற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் D43 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ்.

இந்தப் படம்  சஸ்பென்ஸ் திரில்லராக இந்த படம் உருவாக உள்ளது. எனவே தமிழ் சினிமாவிற்கு துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு,

பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தினை ரீமேக் செய்ய ஆசை இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பேசியுள்ளார்.

Karthick-Naren-cinemapettai

ஆனால் பாரதிராஜாவின் மகன் மனோஜ் சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தினை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது எனவே கார்த்திக் நரேனின் இந்த ஆசை நிறைவேறுமா என்பது சந்தேகம்தான்.

மேலும் மாபியா பட தோல்வியால் கார்த்திக் நரேன், தனுஷின் D43 படத்தின் கதையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக மலையாளத்தில் வைரஸ் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனரை கூட்டு சேர்த்துள்ளார்.

Trending News