ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

முடிவுக்கு வந்த 15 வருட காதல் வாழ்வு.. ஜெயம் ரவியின் விவாகரத்துக்கு தனுஷ் காரணமா.? தீயாய் பரவும் போட்டோ

Jayam Ravi: சமீபகாலமாகவே திரை பிரபலங்கள் அடுத்தடுத்து தங்கள் திருமண வாழ்வை முறித்துக் கொள்கின்றனர். தனுஷில் தொடங்கி சமந்தா, அமலா பால், ஜிவி பிரகாஷ் என இது தொடர்ந்து வந்தது.

தற்போது இந்த பட்டியலில் ஜெயம் ரவி இணைந்துள்ளார். இன்று அவர் தன்னுடைய விவாகரத்து செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பே இப்படி ஒரு தகவல் மீடியாவை சுற்றி வந்தது.

அதனால் இது பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்றாலும் மன வருத்தத்தை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் ஜெயம் ரவி அனைவரிடமும் எதார்த்தமாகவும் இயல்பாகவும் பழகக்கூடியவர்.

அவர் ஆர்த்தியை எந்த அளவுக்கு நேசித்தார் என்பது அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் பட்சத்தில் இவர்களின் பிரிவு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த விவாகரத்துக்கு என்ன காரணமாக இருக்கும் என இப்போது பலரும் தோண்டி துருவ ஆரம்பித்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தனுஷ் ஒரு முக்கிய காரணம் என்ற செய்தி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயம் ரவிக்கு வில்லனான தனுஷ்

அதாவது ஆர்த்திக்கும் அவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பிரச்சனை நடந்தது. அதில் இருவரும் வாக்குவாதம் செய்தபடி இருக்கும் போட்டோவும், ஜெயம் ரவி அப்செட்டில் இருக்கும் போட்டோவும் கூட வெளியானது.

arthi-dhanush
arthi-dhanush

அந்த போட்டோவை தற்போது வைரல் செய்து வரும் ரசிகர்கள் இந்த பிரச்சனைதான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தனி ஒருவன் பட வெற்றியை முன்னிட்டு நடந்த பார்ட்டியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அதில் இருவரும் எதார்த்தமாகத் தான் பேசி இருக்கின்றனர். சண்டை இல்லை என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஆனால் அந்த போட்டோவில் திரிஷா முகத்தை சீரியஸ் ஆக வைத்திருப்பதை பார்த்தால் வாக்குவாதம் போல் தான் தெரிகிறது.

இதைத்தான் சோசியல் மீடியா தரப்பில் ஒரு காரணமாக சொல்கின்றனர். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து இது விவாகரத்தில் முடிவதற்கு காரணம் என்ன? ஒருவேளை பழைய சண்டையை மனதில் வைத்து தனுஷ் தம்பதிகளுக்குள் பிரச்சனையை மூடிவிட்டாரா என்ற ரீதியிலும் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

முன்னதாக அமலாபால், சமந்தா விவாகரத்திற்கு கூட தனுஷ் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதேதான் இப்போதும் சொல்லப்படுகிறது. விரைவில் இதன் உண்மை என்ன என்பதை சினிமா விமர்சகர்கள் புட்டு புட்டு வைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா

Trending News