திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

செஞ்சா உங்கள வச்சு தான் சம்பவம் செய்வேன்.. நித்யா மேனனுக்காக 5 வருடம் காத்துக் கிடக்கும் தனுஷ்

தென்னிந்தியாவின் டாப் நடிகையாக மாறிய நித்யா மேனன் ஃபேவரட் ஹீரோயினாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார். அத்துடன் சினிமாவில் இருக்கும் பல நட்சத்திரங்களும் இவர் வந்து நடித்தால் அந்த படங்கள் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று இவர் மேல் வெற்றி நாயகி என்ற முத்திரையும் பதித்து விட்டார்கள். அது ரொம்பவே உண்மைதான். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே இவருடைய கேரக்டர் ஸ்பெஷலாக கெத்தாக தான் இருக்கும்.

அந்த அளவுக்கு தான் இவர் படங்களை தேர்ந்தெடுப்பார். அதிலும் மற்ற நடிகைகள் போல வருகிற படங்களை எல்லாம் நடித்துக் கொடுக்கும் நடிகையாக இல்லாமல் இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையை மட்டும் நடிப்பதற்கு கமிட் ஆவார். அதனாலயே சினிமாவில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இவருடன் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Also read:  அட்லீ,விஜய் கூட்டணியில் நடிக்க மறுத்த பிரபல நடிகை.. கதை கூறும் போது வாக்குவாதத்தில் முடிந்த சம்பவம்

அந்த வகையில் தனுஷ் இவரை மனதில் வைத்துக் கொண்டு ஒரு கதையை ரெடி பண்ணி வைத்திருக்கிறார். அதற்காக தனுஷ்,நித்தியா மேனனியிடம் போன் பண்ணி நான் டைரக்ட் பண்ண போகிறேன் அதில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அவர் இப்பொழுது நடிப்பிற்கு கொஞ்சம் பிரேக் விட்டிருக்கிறேன். அதனால் என்னால் இப்பொழுது நடிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதை கேட்ட தனுஷ் இந்த படத்தை எடுத்தால் உங்களை வைத்து தான் எடுப்பேன். அதற்கு எவ்வளவு நாள் ஆனாலும் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். நீங்கள் எப்பொழுது நடிப்பீர்கள் என்று என்னிடம் சொல்லுங்கள் அப்பொழுதே இந்த கதையை நான் இயக்குகிறேன் என்று தனுஷ் அவருடைய முடிவை சொல்லிவிட்டார்.

Also read:  செல்வராகவனை நம்பி பிரயோஜனம் இல்ல.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் தனுஷ்

அதன் பிறகு தற்செயலாக இவர்களுக்கு அமைந்த கதைதான் திருச்சிற்றம்பலம். அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக இருவருக்குமே அமைந்தது. அந்த நேரத்தில் மறுபடியும் தனுஷ், நித்யாவிடம் உங்களுக்காக கதையை நான் ரெடி பண்ணி ஐந்து வருடமாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறுகிறார். அதற்கு நித்தியா மேனன் ஏன் கதையை வைத்து இவ்ளோ நாள் வெயிட் பண்ணனும் வேற யாரையாவது வைத்து எடுத்திருக்கலாமே என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு தனுஷ் நான் கதை எழுதும் போது இதில் நீங்க நடிக்கிற மாதிரி தான் என் மனதிற்குள் நினைத்து ஒவ்வொன்றையுமே நான் எழுதி வைத்திருக்கிறேன். இதில் வேற எந்த ஹீரோயினுமே வைத்து என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார். நீங்கள் நடிச்சா நான் டைரக்ட் பண்ணுவேன் இல்லையென்றால் அந்த கதை அப்படியே இருக்கட்டும் என்று தனுஷ் கூறியதாக நித்தியாமேனன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். தனுஷ் இப்படி தீவிரமாக இருக்கிறதை பார்த்தால் நித்யா மேனனை வச்சு பெரிய சம்பவம் செய்ய காத்திருக்கிறார் என்று தெரிகிறது.

Also read:  சிவகார்த்திகேயனை பழி தீர்க்க களமிறங்கும் தனுஷ்.. இந்த வாட்டி சும்மா விடுறதா இல்ல

Trending News