சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மனைவியை விட்டு பிரிந்த பின் புத்தி தெளிந்த தனுஷ் ஜெயம் ரவி.. கமுக்கமாக இருந்து கன்னி வெடி வைத்த மாமியார்

Jayam Ravi and Dhanush: விவாகரத்து என்பது கடையில கேட்டதும் உடனே கிடைக்கிற விஷயம் என்பதற்கு ஏற்ப பலரும் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பினால் உடனே விவாகரத்தை நாடிப் போய் விடுகிறார்கள். அதிலும் சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பல வருடங்களாக வாழ்ந்த பிறகும் ஒரு மனஸ்தாபம் வந்த பிறகு உடனே விவாகரத்து செய்ய முடிவு பண்ணி விடுகிறார்கள். அப்படித்தான் சமீப காலமாக பல பிரபலங்கள் விவாகரத்து செய்து கொண்டு வருகிறார்கள்.

இந்த லிஸ்டில் யாரும் எதிர்பார்க்காத மனம் ஒத்தும் தம்பதிகளாக பெயர் வாங்கின ஜெயம் ரவி ஆர்த்தி வந்து விட்டார்கள். இந்த விஷயத்தை ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் என்னது இவர்கள் பிரியப் போகிறார்களா? சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூட ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அதிக அன்பை வெளிப்படுத்தும் விதமாக பேசினார்கள்.

பாடகி கெனிஷாவை புகழ்ந்து தள்ளிய ஜெயம் ரவி

ஆனால் என்ன அதற்குள் விவாகரத்து முடிவை எடுத்து விட்டார்கள் என்று முணுமுணுக்க வைத்தது. ஆனால் இதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் ஆர்த்தியின் அம்மா, கமுக்கமாக இருந்து ஜெயம் ரவியை அடக்குமுறை செய்து வந்ததனால் தான் ஜெயம் ரவி இந்த முடிவு எடுத்திருக்கிறார் என்பது ஒரு பக்கம் கசிந்து வருகிறது. இன்னொரு பக்கம் ஜெயம் ரவி பாடகி கெனிஷா உடன் இருக்கும் தொடர்பினால் கூட வாய்ப்பு இருக்கிறது என்றும் சில சர்ச்சைகள் எழும்பி வருகிறது.

இந்நிலையில் விவாகரத்து நோட்டீசை வெளியிட்ட ஜெயம் ரவி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என சில செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் என்கிற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவி கலந்து கொண்டார். அதில் ஜெயம் ரவியின் அண்ணன் மற்றும் அக்கா அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு ஜெயம் ரவிக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.

அத்துடன் ஜெயம் ரவியும், திருமணத்திற்கு பிறகு தன்னுடைய குடும்பத்தை இந்த அளவிற்கு கௌரவித்து சந்தோசப்படுத்தும் ஒரு தருணமாக இப்பொழுதுதான் பார்க்கப்படுகிறது. பொண்டாட்டி பக்கத்தில் இருக்கும் பொழுது பெற்றோர்களின் அருமையை புரிந்து கொள்ளாத ஜெயம் ரவி தற்போது தான் தன்னுடைய குடும்பத்தை எட்டிப் பார்க்கும் அளவிற்கு எண்ணம் தோன்றியிருக்கிறது.

இதே மாதிரி தான் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் ஒரு வாழ்க்கை வாழ்ந்து வரும் பொழுது பெற்றோர்களை பெருசாக எங்கேயும் கூட்டிட்டு போய் கவுரவப்படுத்தியது இல்லை. ஆனால் எப்பொழுது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்தாரோ அப்பொழுதே அனைத்து விஷயங்களுக்கும் தன் பெற்றோர்கள் முன்னிலையில் வைத்து அவர்களின் ஆசிர்வாதத்தை பெற்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறார்.

ஆக மொத்தத்தில் மனைவி மற்றும் குடும்பத்துடன் இருக்கும் பொழுது பெற்றோர்களின் அருமை புரியவில்லை. மனைவியை விட்டு பிரிந்த பின்பு தான் பெற்றோர்களின் அருமை புரியும் படி புத்தி தெளிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவி அளித்த பேட்டியில் என்னுடைய விவாகரத்து என் தனிப்பட்ட முடிவு. அதில் ஆளுக்கு ஆளு ஒவ்வொரு கருத்தை சொல்லி திணிக்காதீர்கள்.

அத்துடன் பாடகி கெனிஷா 600 ஸ்டேஜ் ஷோ பாடி தனி ஆளாக நின்னு இந்த அளவுக்கு ஜெயித்துக் காட்டி இருக்கிறார். பல உயிர்களை காப்பாற்றி சைக்காலஜிஸ்ட். அவர்களை பற்றி தவறாக பேச வேண்டாம். நானும் அவங்களும் வருங்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க வேண்டும் என்று பிளான் பண்ணி வைத்திருக்கிறோம். அதை யாரும் கெடுக்க வேண்டாம், கெடுக்கவும் முடியாது. மற்றவர்களை வாழவிடு நிம்மதியாக இருக்க விடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் இந்த தருணத்தில் கூட இவருடைய மனைவி ஆர்த்தியை பற்றி எந்தவித வார்த்தையும் பேசாமல் பாடகி கெனிஷாவை பற்றி பெருமையாக பேசி இருப்பது பலருக்கும் இவர் மீது இருக்கும் சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

Trending News