வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மீண்டும் கேங்க்ஸ்டர் மூவியில் தனுஷ்.. ஜகமே தந்திரம் மாதிரி ஆகாமல் இருந்தால் சரி

தமிழ் சினிமாவில் கேங்க்ஸ்டர் மூவி என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு உண்டாகும். அந்த வகையில் பல கேங்க்ஸ்டர் தமிழ் படங்கள் இன்றுவரை தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளன.

நடிகர் தனுஷிற்கு ஒரு அடையாளம் கொடுத்த படம் புதுப்பேட்டை. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம். அதில் வரும் வசனங்களும், தனுஷின் நடிப்பும் இன்று வரை பட்டிதொட்டியெல்லாம் நிலைத்து நிற்கிறது.

புதுப்பேட்டை படத்தை போல தனுஷ் நடித்து வெளிவந்த கேங்க்ஸ்டர் படமான மாரி, வடசென்னை போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. ஆனால் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜகமே தந்திரம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது. ஆனால் தனுஷுக்கு இது ஒரு மாபெரும் வெற்றி படமாக  அமையும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் ப்ளாப் ஆனது.

இதனை தொடர்ந்து தனுஷின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கிடைத்துள்ளது. இவர் தற்போது அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் ராக்கி படத்தை எடுத்த இயக்குனர்.

இந்நிலையில் தனுஷின் அடுத்த படமும் ஒரு கேங்ஸ்டர் மூவி தானென்று அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளா. ஏற்கனவே தனுஷ் ஜகமே தந்திரம் படத்தில் வாங்கிய அடியில் இருந்து இன்னும் மீளவில்லை, இருந்தாலும் மாதேஸ்வரனை நம்பி அடுத்த அடி எடுத்து வைக்கிறார்.

Trending News