வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ராக்ஸ்டாருடன் போதையில் பாடிய தனுஷ்.. இசைஞானியுடன் ஒர்க் அவுட் ஆகுமா அந்த கெமிஸ்ட்ரி

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு வெற்றிமாறன் இயக்கி வரும் படம் விடுதலை. இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

விடுதலை படத்திற்கு இசை அமைப்பதற்காக வெற்றிமாறன் இளையராஜாவை நாடியுள்ளார். வெற்றிமாறனின் அசுரன், விசாரணை படத்தை பார்த்து விட்டு இப்படத்தில் இசையமைக்க இளையராஜா ஒப்புக்கொண்டாராம். விடுதலை படத்தில் முதல் முறையாக இளையராஜா இசையில் தனுஷ் ஒரு பாடல் பாடியுள்ளார்.

வெற்றிமாறனின் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வடச்சென்னை, அசுரன் ஆகிய படங்களில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார். அது மட்டுமல்லாமல் சிறந்த படம் அசுரன், சிறந்த இயக்குனர் வெற்றிமாறனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதனால் தனுஷ் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் பாடல் பாடியுள்ளார்.

விடுதலை படத்தில் ஒரு பாட்டுக்காக இளையராஜாவிடம் காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை தனுஷ் பயிற்சி பெற்றார். தொடர்ந்து 4 மணி நேர பயிற்சியில் தனுஷ் கொஞ்சம்கூட சோர்வு ஆகாமல் அந்த பாடலை பாடி முடித்தாராம். இந்த செய்தியை சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் வெற்றிமாறன் கூறினார்.

அனிருத் இசையில் பல பாடல்கள் பாடியுள்ள தனுஷ் இது போன்ற பயிற்சி எதுவும் எடுப்பது இல்லையாம். அனிருத் இசையில் சில பாடல்களை சரக்கு போட்டுக்கொண்டு போதையில் கூட தனுஷ் பாடல்கள் பாடியுள்ளாராம். இவர்களது கூட்டணியில் வெளியான ஒய் திஸ் கொலவெறி பாடல் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வைரலானது.

இப்படி அனிருத் மற்றும் தனுசுக்கு இருந்த கெமிஸ்ட்ரி இளையராஜாவுடன் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கண்டிப்பாக இந்தப் பாடல் பட்டி தொட்டியெல்லாம் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News