தனுஷ் தொடர்ந்து நல்ல நல்ல இயக்குனர்களுடன் சிறந்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திடீரென பழைய சுமாரான மாஸ் இயக்குனருடன் சேர்ந்துள்ளது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
படத்திற்கு படம் தனுஷின் மார்க்கெட் வேற லெவலில் எகிறிக் கொண்டிருக்கிறது. மேலும் கண்டெண்ட் திரைப்படங்களை வைத்துக்கொண்டு 100 கோடி வசூல் செய்வதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. அதனை அசுரன் படத்தின் மூலம் அசால்டாக செய்தவர்தான் தனுஷ்.
அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படம் ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. கர்ணன் படத்தின் ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களை பெரிய அளவில் எதிர்பார்க்க வைக்கிறது.
மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற கேங்க்ஸ்டர் படம் ரெடியாகி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது. மே 1 ஆம் தேதி வெளியாக போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இப்படி அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனது சுமாரான வெற்றிப்படம் கொடுத்த பாலாஜி மோகன் என்பவருடன் மீண்டும் இணைந்துள்ளது தனுஷ் ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
தனுஷை வைத்து மாரி என்ற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்தாலும் அதைத் தொடர்ந்து வெளியான மாரி 2 திரைப்படம் படு குப்பையாக இருந்தது. தற்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தயவுசெய்து தனுஷ் இந்த முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.