வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சம்பவம் இருக்கு.. ஜெயிலர் 2 படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு Tough கொடுக்க போகும், அசுர நடிகர்?

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்துள்ளது. ஞானவேல் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்படம் சிறந்த கண்டன்ட் படமாக உருவாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகின்றது. ஜெயிலர் போல இப்படமும் ஒரு மல்டி ஸ்டாரர் படமாகவே தான் உருவாகி வருகின்றது.

நாகர்ஜுனா, சத்யராஜ், சௌபின் ஸாஹிர் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கூலி படத்தை தொடர்ந்து ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் கதை விவாதத்தில் நெல்சன் தற்போது பிசியாக இருக்கின்றார். இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது.

இணையும் அசுர நடிகர்

சமீப நாட்களாக, ஜெயிலர் 2 படத்தில் தனுஷ் நடிக்கிறார், சூப்பர்ஸ்டாருடன் இணைந்து சண்டை காட்சிகளில் நடிப்பார், முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களை வியப்புக்குள் ஆழ்த்தியது. இதை தொடர்ந்து, ரஜினியும் தனுஷும் இணைந்து நடித்தால் எப்படி இதுற்கும் என்ற கற்பனையில் ரசிகர்கள் இருந்தனர்.

அதே நேரத்தில், இது அதிகாரபூர்வமான தகவலும் இல்லை. தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் கதை விவாதத்தில் தான் இருக்கின்றது. இப்படி இருக்க இது எப்படி உண்மையாக இருக்க முடியும் என்ற கேள்வியும் பலருக்கு உள்ளது.

இந்த நிலையில், தற்போது வந்த தகவலின் படி ஜெயிலர் 2 படத்தில் தனுஷ் நடிப்பதாக வந்த தகவல் உண்மை இல்லையாம். அதெல்லாம் வெறும் வதந்தி தானாம். நடிகர்களின் தேர்வு எல்லாம் திரைக்கதை விவாதத்திற்கு பிறகு தான் நடக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Trending News