செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

கர்ணன், ஜகமே தந்திரம் படம் எப்போது ரிலீஸ் தெரியுமா.? இணையத்தில் கசிந்த வேற லெவல் அப்டேட்

தமிழ் சினிமாவில் நடிப்பு அசுரனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷின் நடிப்பை பற்றி பலரும் பாராட்டி வந்தனர்.

தற்போது தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன், கார்த்திக் நரேன் உடன் ஒரு படத்திலும், செல்வராகவனுடன் நானே வருவேன் என்ற படத்திலும் ஹிந்தியில் அட்ராங்கி ரே, ஹாலிவுட் தி கிரேக் மேன் எனும் வெப் சீரியஸில் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷுக்கு அடுத்து அடுத்ததாகப் படங்கள் வெளியாகும் தகவல் வெளியாகி வருகின்றன. கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் வருகிற காதல் தினத்தன்று வெளியான தகவல்கள் வெளியாகின.

தற்போது தனுஷ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த கர்ணன் படம் வெளியாகும் தகவல் கிடைத்துள்ளது. அதாவது கர்ணன் திரைப்படம் முழுவதுமாக முடிந்துள்ளது.

karnan
karnan

போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், படத்தை தமிழ்புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அதாவது ஏப்ரல் 9ஆம் தேதி அன்று படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து இந்த ஆண்டு அதிக படங்கள் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது இதனை தனுஷ் சமூக வலைதளப் பக்கத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Trending News