போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்.. நான் என் வேலையை பார்க்கிறேன் என்று தனது வேலைகளை மட்டும் கவனிக்கிறார் நடிகர் தனுஷ். யார் வசைபாடுதலையும் தலையில் ஏற்றிக்கொள்ளமள் ஒரு பக்கம் நடிப்பு, மறுபுறம் இயக்கம், தயாரிப்பு, என்று ஆல் ரவுண்டராக வளம் வருகிறார். கடந்த ஒரு வருடமாக பல சர்ச்சைகளில் தனுஷ் சிக்கினாலும், இதுவரை அவர் எதற்கும் பதிலளிக்காமல் தனது பணியை மட்டும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது. இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே உள்ளது. இந்த படத்தில், ராஷ்மிகா, நாகர்ஜுனா என்று பலர் நடிப்பதால், இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு உள்ளது.
அடுத்த அத்தியாயத்தில் கால் வைக்கும் தனுஷ்
தனுஷ் நடிக்கும் குபேரா படம் தான் தனுஷின் வாழ்நாளிலே அதிக பொருட்ச்செலவில் உருவான ஒரு படமாக உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட், 120 கோடி. ஆரம்பத்தில் 80 கோடி பட்ஜெட் ஆக இருந்த இந்த படம், படிப்படியாக உயர்ந்து 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. தமிழில் சமீபத்தில் தான் 100 கோடி வசூலை கொடுத்தார். அதற்குள் தனுஷுக்கு, அதிக பட்ஜெட் படம் வந்துவிட்டது.
அதுமட்டுமின்றி, அடுத்ததாக ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார். அதன் பட்ஜெட்டும் அதிகமாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்க, அடுத்தடுத்த வெற்றிகளை கண்டு, தனது கேரியரில் அடுத்த அத்தியாயத்தில் கால் பதித்துள்ளார் தனுஷ்.
மேலும் இட்லி கடை படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகளையும் ஒரு பக்கம் கவனித்து கொண்டிருக்கிறார். இப்படி பிசியாக இருக்கும் தனுஷின் குபேரா படம் பிப்ரவரி 21-ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் நிச்சயமா தனுஷ் நடித்த படங்களிலிருந்து மாறுபட்ட படமாக இருக்கும்.