வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ஒரே ட்விட்டால் தயாரிப்பாளரை மிரள விட்ட தனுஷ்.. ஜகமே தந்திரம் லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் மருமகன் என்றாலும் அந்த கெத்தை சிறிதும் வெளிப்படுத்தாமல் தனது நடிப்பால் மட்டுமே முன்னேறி, முன்னணி நடிகராக மாறி இருப்பவர்தான் நடிகர் தனுஷ். இவருடைய எளிமைதான் இவரை கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட், பாலிவுட் வரை தூக்கி சென்றது என்றே கூறலாம்.

தற்போது தனுஷின் நடிப்பில் தயாராகி, நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கும் படம்தான் ‘ஜகமே தந்திரம்’. இந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார். மேலும் இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு தனுஷின் ரசிகர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.

சமீபத்தில் இந்தப் படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்திற்கு கைப்பற்றப்பட்டதாகவும், இதனால் தனுஷும் இயக்குநரும் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தற்போது தனுஷ் ‘ஜகமே தந்திரம்’ படத்தைப் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஜகமே தந்திரம் படம் OTTயில் வெளியிடுவதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தனுஷின் ரசிகர்கள் பலர் ஒய் நாட் ஸ்டூடியோஸ் மீது செம காண்டில் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் படத்தை OTTல் வெளியிடும் தினத்தன்று தியேட்டர்களிலும் வெளியிடலாமா என்று தயாரிப்பாளர் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

இதனை தெரிவிக்கும் வகையில் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘ரசிகர்கள், தியேட்டர் ஓனர்கள், சினிமா லவ்வர்கள் போல நானும் ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டும் என விரும்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப்பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் பலரை படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News