தமிழ் சினிமாவில் அசுரன் திரைப்படம் வெற்றி அடைந்ததிலிருந்து தனுஷ்க்கு நடிப்பு அசுரன் பெயர் சூட்டியுள்ளனர். இவர் அன்றாட வாழ்க்கையில் என்ன என்ன பழக்கவழக்கங்கள் வைத்துள்ளார் என்பதையும் இவருடைய திரை வாழ்க்கையை பற்றியும் இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வெற்றிக்காக தடுமாறிக் கொண்டிருந்த நடிகர்களில் தனுசும் ஒருவர். இவர் நடிப்பில் ஆரம்ப காலத்தில் வெளியான படங்கள் அனைத்துமே சுமாரான வெற்றியை பதிவு செய்து வந்தன.
அதன் பிறகு தனுஷ் செல்வராகவனுடன் ஒரு சில படங்களில் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெற்றன. தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி அமைந்த பிறகு இவரது திறமையும் புகழும் எங்கேயோ போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.
வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்திற்காக கிட்டத்தட்ட 6 தேசிய விருதுகள் கிடைத்தன. அதில் தனுசுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.
இத்தனை ஹிட் படங்கள் கொடுத்த தனுஷ் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுக்கு பெரிய அளவில் மரியாதை கொடுக்க மாட்டார் என பல நடிகர்கள் பல மீடியாவில் கருத்து பதிவு செய்து வந்துள்ளனர்.