ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை விஸ்வரூபம் எடுத்த தனுஷ்.. அவர் பயன்படுத்தும் பல கோடி மதிப்பிலான கார்கள்

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் வெற்றியைக் எப்படி கொடுப்பது என தெரியாமல் தவித்து வந்த நடிகர்களில் தனுஷும் ஒருவர். இவரது அண்ணனான செல்வராகவன் மற்றும் திரைத்துறை நண்பரான வெற்றிமாறனுடன் கூட்டணி அமைந்த பிறகு தான் தனுஷுக்கு சினிமா வாழ்க்கை தொடங்கியது என்று கூட கூறலாம்.

சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறிய தனுஷ் தன்னுடைய படத்தில் நடிக்கும் சக நடிகர்களை பெரிய அளவிற்கு மதிக்க மாட்டார் என்ற குற்றச்சாட்டும் அவ்வப்போது எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவரது திரைத்துறை வாழ்க்கையை பற்றி பலருக்குத் தெரியும் ஆனால் இவர் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களை செய்து வருகிறார் எண்ணங்கள் பழக்கவழக்கங்கள் வைத்துள்ளார் என்பதை அவரே பல பேட்டிகளில் ரசிகர்களுக்காக தெரிவித்துள்ளார். அதைப் பற்றி ஒரு விரிவான தொகுப்பு.

dhanush car
dhanush car

சினிமாவில் நடிப்பதற்கு முன்பு தனுஷுக்கு வெங்கடேஷ் பிரபு என்பது தான் இயற்பெயர் ஆனால் இது பலருக்கும் தெரியாது எனக் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் தனுஷின் மெல்லிய உடலை பார்த்து பலரும் நீங்கள் வெஜிடேரியன் சாப்பிடுகிறீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு தனுஷ் வெஜிடேரியன் உணவுகள் தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

தனுஷுக்கு பொழுதுபோக்கு என்றால் புத்தகங்களைப் படிப்பது ஏதாவது ஒன்றை நினைத்து கதை எழுதுவது தான் என்னுடைய பொழுதுபோக்கு என கூறியுள்ளார். சினிமாவில் படங்கள் நடிப்பேன் ஆனால் அதைப் பற்றியே எப்போதும்  நினைத்துக் கொண்டிருக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

dhanush
dhanush

பன்முகத் திறமை கொண்ட தனுஷுக்கு கார் மீது அளவு கடந்த ஆசை உள்ளது. கிட்டத்தட்ட இவரிடம்

  • ஆடி ஆர் 8 – 2.30 கோடி
  • பென்ட்லி – 3.21 கோடி
  • ரேஞ்ச்ரோவர் – 60 லட்சம்
  • ஃபோர்டு மஸ்டாங் – 74 லட்சம்
  • ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் – 7.95 கோடி

போன்ற பல கார்கள் வைத்துள்ளார். பல பணக்காரர்கள் குடியிருக்கும் போயஸ்கார்டனில் தற்போது புதியதாக வீடு ஒன்றை பிரம்மாண்டமாக கட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் போயஸ் கார்டனில் அதிகமாக அரசியல்வாதிகள் கொண்டிருப்பதால் ஒருவேளை தனுஷ் அரசியல் களத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

Trending News