திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தனுஷ் லிப் டூ லிப் கிஸ் அடித்த நடிகைகளின் லிஸ்ட்.. குட்டி கமல்ஹாசனா இருப்பாரோ

தமிழ்சினிமாவில் முத்தத்திற்கு பெயர் போனவர் கமலஹாசன். ஆனால் சமீபகாலமாக தனுஷ் தான் நடிக்கும் படங்களில் அவருடைய சிஷ்யன் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இந்த படங்களில் யார் யாருடன் அதை நிரூபித்து இருக்கிறார் என்பதை பார்ப்போம்.

பொதுவாகவே சினிமாவில் ரொமான்ஸ் காட்சிகளில் முத்தம் கொடுப்பது என்பது சாதாரண ஒன்றுதான். ஆனால் சமீபகாலமாக இங்கிலீஷ் படம் ரேஞ்சுக்கு நடிகைகளுடன் நடிகர்கள் உதட்டு முத்தக்காட்சிகளில் ஈடுபடுவது அதிகமாகிவிட்டது. அதிலும் தனுஷ் படங்களில் அளவுக்கு அதிகமாகவே இருந்து வருகிறது.

தனுஷ் சினிமாவுக்கு வந்த காலகட்டங்களில் இருந்து அவருடைய படங்களில் மட்டும்  நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகள் அதிக அளவில் இடம் பெறும். அதில் தன்னுடைய முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் ஷெரினுக்கு முத்தம் கொடுத்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து சுள்ளான் படத்தில் சிந்து துலானி, அது ஒரு கனாக் காலம் பிரியாமணி, மரியான் பார்வதி, 3 ஸ்ருதிஹாசன், வேலையில்லா பட்டதாரி அமலாபால், அனேகன் அமைரா தஸ்தூர், தங்கமகன் எமி ஜாக்சன், சமந்தா ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதோடு மட்டுமில்லாமல் அவர் நடித்த ஹாலிவுட் படத்திலும் அந்த பட நடிகைக்கு முத்தம் கொடுத்து இருந்தார். மேலும் வடசென்னை ஐஸ்வர்யா ராஜேஷ், என்னை நோக்கி பாயும் தோட்டா மேகா ஆகாஷ் என தனுஷ் உதட்டு முத்தம் கொடுத்த நடிகைகள் லிஸ்ட் மட்டும் ஏராளம்.

தற்போது இந்திய சினிமாவில் கொண்டாடும் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ள தனுஷ் இனி தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு முத்தக்காட்சியாவது நடித்து விடுவார் என்கிறது சினிமா வட்டாரம்.

Trending News