சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

இட்லி கடை மூலம் மீண்டும் ஃபார்முக்கு வரும் தனுஷ்.. சிவகார்த்திகேயன் கையிலிருந்து துப்பாக்கியை வாங்க திட்டமா?

Idli Kadai: நடிகர் தனுஷ் இயக்கி, தயாரித்து, நடிக்கும் இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் ரிலீஸ் தேதியுடன் வெளியாகி இருக்கும் போஸ்டர் தான் ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது.

திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுசுடன் மீண்டும் நித்யா மேனன் இணைவது இந்த படத்தின் பெரிய பாசிட்டிவ்.

இதைத் தாண்டி படத்தின் வில்லனாக அருண் விஜய் ஒப்பந்தமாய ஸ்டைலில் ஏதாவது ஒரு ஜாலி படத்தை எடுத்து இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

அஜித்துடன் மல்லு கட்ட ரெடியான தனுஷ்

ஆனால் இன்று வெளியாகி இருக்கும் போஸ்டரிலேயே படம் அதிரடி ஆக்சன் பிளாக் என தெரிந்து விட்டது. இந்த போஸ்டரில் அருண் விஜய் பாக்சர் கெட்டப்பில் அமர்ந்திருக்கிறார்.

அவரது பக்கத்தில் தனுஷ் ரொம்ப பவ்யமாக நின்று கொண்டிருக்கிறார். போஸ்டரை தாண்டி படத்தின் ரிலீஸ் தேதி தான் அட்ரா சக்கை என சொல்ல வைத்திருக்கிறது.

தனுஷ் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரல் பத்தாம் தேதிக்கு லாக் செய்து இருக்கிறார். இந்த நாளில் தான் அஜித் நடித்திருக்கும் குட் பேட் அக்லி படமும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கடைசியில் அஜித்தின் ஆஸ்தான வில்லன் விக்டரையே அஜித்துடன் மோத வைக்கிறார்.

Idlikadai
Idlikadai

அஜித்துடன் நேருக்கு நேர் மோத தனுஷ் முடிவெடுப்பதிலிருந்து கோலிவுடில் மீண்டும் ஃபார்முக்கு வர ரெடியாகிவிட்டார் என்பது தெரிகிறது.

சிவகார்த்திகேயன் சூர்யாவின் கங்குவா படத்தை பின்னாடி தள்ளி அமரன் மூலம் வசூல் வேட்டையாடினார். இதனால் சினிமாவில் முதல் கட்ட நடிகர்கள் லிஸ்டிலும் வந்துவிட்டார்.

இதேபோன்று அஜித் படத்துடன் போட்டி போட்டு வெற்றி பெற்று விட்டால் தாராளமாக சிவா கையில் இருக்கும் துப்பாக்கியை வாங்கிவிடலாம் என்று நினைத்து விட்டார் போல.

Trending News