திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினியின் மூன்று படத்தை ரீமேக் செய்ய ஏங்கும் தனுஷ்.. துரோகத்தால் நிறைவேறாமல் போகும் ஆசை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 80 காலகட்டங்களில் நடித்த படங்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட்டானது. அவர் நடித்த படத்தின் கதைக்களம், ஆக்ஷன் காட்சிகள் என ஒவ்வொன்றும் செதுக்கியிருப்பார். இவரது படங்களில் மீண்டும் ரஜினியே நடித்தாலும் ஈடுகொடுக்க முடியாத அளவில் ரஜினியின் நடிப்பு அன்றைய காலக்கட்டத்தில் அசத்தலாக இருந்தது.

இதனிடையே கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான பில்லா திரைப்படம், 1980 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்தின் படங்களை ரீமேக் செய்ய பல இயக்குனர்கள் தைரியமாக முன் வந்தனர்.

Also Read: ரஜினிகாந்த், ஸ்ரீதேவி கொடுத்த மரண மாஸ் ஹிட்ஸ்.. வசூல் வேட்டை ஆடிய 6 படங்கள்

அந்த வகையில் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான மாப்பிள்ளை திரைப்பம்1989 ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையிலும், தனுஷ் தொடர்ந்து ரஜினி நடித்த மூன்று படங்களை ரீமேக் செய்து நடிக்கலாம் என முற்பட்டார்.

அதில் ரஜினியின் 1982 ஆம் ஆண்டு வெளியான மூன்று முகம், 1994 ஆம் ஆண்டு வெளியான வீரா,1981 ஆம் ஆண்டு வெளியான நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களை ரீமேக் செய்து நடிக்க தனுஷ் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் தனுஷ் தனது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்த நிலையில், அந்த மூன்று படங்களின் ரீமேக் அப்படியே கிடப்பில் உள்ளது.

Also Read: ஆரம்பிக்கும் முன்பே ஏற்பட்ட மோதல்.. கேரியருக்காக 30 வருட நட்பை உடைத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

தனுஷ், ரஜினிக்கு மருமகனாக இருந்த போது அவர் மாப்பிள்ளை படத்தில் நடிக்க அனுமத்தித்தார். ஆனால் தற்போது தனது மகளுக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற தனுஷை தான் நடித்த படங்களில் ரீமேக் செய்து நடிக்க ரஜினி அனுமதி கொடுப்பது என்பது பெரும்கேள்விக்குறியாக உள்ளது. நடிகர் தனுஷ் அண்மையில் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஹிட்டான நிலையில், இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்து லால் ஸலாம் படத்தில் இயக்க ஆயத்தமாகியுள்ளார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து தனது மகளின் சினிமா கேரியருக்கு உறுதுணையாக உள்ளார். இந்த சமயத்தில் ரஜினியின் படங்களை ரீமேக் செய்ய துடித்து வரும் தனுஷின் கனவு நிறைவேறுவது என்பது சாத்தியமே இல்லாதது என கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: மாஸ் ஹீரோவை சந்தித்து ஒன் லைன் ஸ்டோரி கூறிய வெற்றிமாறன்.. செம கடுப்பில் தனுஷ்

Trending News