திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சத்யராஜை அப்படியே பிரதிபலிக்கும் தனுஷ்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

Actor Dhanush: தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காமல் தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். அதன்படி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் ஐம்பதாவது படம் உருவாக இருக்கிறது.

இதற்கான ஆரம்ப கட்ட பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த படத்தை தனுஷ் அவரே இயக்கி, நடிக்க இருக்கிறார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நீண்ட முடி மற்றும் தாடியுடன் நடித்திருந்தார். வெளியில் செல்லும்போதும் இதே கெட்டப்புடன் தான் அவரை கடந்த சில மாதங்களாக பார்க்க முடிந்தது.

Also Read : நாசுக்காக ஒதுங்கிய கமல், ரஜினி.. சிவகார்த்திகேயனை மீண்டும் தூக்கி விட தனுஷ் காட்டிய விசுவாசம்

இந்நிலையில் திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்து விட்டு வந்துள்ளார். அவர் மட்டுமின்றி தனுஷின் மகன்களும் மொட்டை அடித்திருந்ததை புகைப்படங்களில் பார்க்க முடிகிறது. ஏதோ ஒரு வேண்டுதல் காரணமாக தனுஷ் மொட்டை அடித்ததாக கூறப்பட்டது.

இந்த சூழலில் தனுஷின் ஐம்பதாவது படத்தில் எந்த கெட்டப்பில் நடிக்கிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல திருப்பதி ஏழுமலையானுக்கு வேண்டுதல் போட்ட மொட்டை கெட்டப்பில் தான் 50-வது படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறாராம்.

Also Read : சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயனால் மாறி வரும் கலாச்சாரம்.. டம்மி பீஸ் ஆக மாறும் ஹீரோயின்கள்

ஒரு ஹீரோ இப்படி நடிப்பதா என பலரும் யோசித்தாலும், நூறாவது நாள் படத்தில் சத்யராஜின் கெட்டப் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குக் காரணம் அவருடைய மொட்டை மற்றும் கண்ணாடி தான். அதேபோல் தனுஷ் 50 படத்தில் சத்யராஜை அப்படியே பின்பற்றப் போகிறாராம். படம் முழுக்க தனுஷ் இப்படியே தான் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சத்யராஜ் ஹீரோவாக நடித்ததை தாண்டிலும் இப்பவும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இப்போது வந்த பிரதீப் ரங்கநாதன் உடன் கூட நடித்த சத்யராஜ் தனுஷின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இனிவரும் காலங்களிலாவது இந்த காம்போ இணைந்த நடிக்கிறார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Also Read : கணவர்களின் ஆதிக்கத்தால் 5 நடிகைகளின் கேரியருக்கு வந்த ஆப்பு .. சத்யராஜ் உருட்டிய ஆறடி அரேபிய குதிரை

Trending News