திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

லோகேஷுக்கு போட்டியாக பிரமாண்டமாக உருவாக உள்ள தனுஷின் LCU.. அடிச்சு நொறுக்க போகும் 500 கோடி வசூல்

தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் அவரது 50வது படமாகும். அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார். இதை தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோவம் படத்தையும் இயக்கியுள்ளார். அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து டான் pictures தயாரிப்பில் தனுஷ் இயக்கும் அடுத்த படம் பற்றிய சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, ஹாலிவுட் என தனது அசாத்திய நடிப்பால் உச்சம் தொட்டு வருகிறார் நடிகர் தனுஷ். நடிப்பில் மட்டுமல்ல, சகலகலவல்லவனாக பாடல், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று எல்லாவற்றிலும் full form-இல் கலக்கி கொண்டிருக்கிறார் தனுஷ்.

‘பவர் பாண்டி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான தனுஷின் இயக்கத்தில் வெளியான ‘ராயன்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஹிட் படமாக வசூலை குவித்தது. ‘ராயன்’ படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் கோல்டன் ஸ்பாரோவ் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் குபேரா படம் வேற ரிலீஸ் க்கு தயாராகி நிற்கின்றது. தற்போது தனது 52வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் சத்யராஜ், ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றுவருகிறது.

படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது. மிகவும் எளிமையாக அமைந்துள்ள படத்தின் போஸ்டர் மற்றும் படத்தின் பெயர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அன்று தனுஷின் உருவத்தை வைத்து பலரும் கேலி செய்த பலர் இன்று வாயடைத்து போயி நிற்கின்றார்கள். தனது வெற்றியை ஒவ்வொரு படத்திலும் சொல்லி அடிக்கிறார் தனுஷ்.

dhanush-idlikadai
dhanush-idlikadai

ராயன் படத்தில் தனது ஃபாஸ்ட் ஃபுட் கடையை விட்டு விட்டு தங்கையுடன், தம்பியின் குழந்தையை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு கிளம்பி விடுவார். அதே கதையின் தொடக்கமாக தேனியில் இட்லி கடை போட்டு அதன் மூலம் இந்த படத்தின் கதை நகர்கிறதாம். தனுஷ் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படம் ராயன் படத்தின் 2ம் பாகம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. லோகேஷுக்கு போட்டியாக தனுஷின் LCU பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

Trending News