வியாழக்கிழமை, டிசம்பர் 5, 2024

தனுஷ் மிஸ் செய்த படம், ஜெயம் ரவி நடிப்பில் மாஸ் ஹிட்.. இத்தனைக்கும் அது மோகன் ராஜா படம்!

தனுஷ் நடிக்கயிருந்த படத்தில் ஜெயம் ரவி நடித்து பின்னர் சூப்பர் ஹிட்டடித்த படத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இத்தனைக்கும் அது மோகன் ராஜா படம் என்பது அனைவருக்குமே ஒரே மாதிரி தான்.

தற்போதைக்கு தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் நடிகைகளில் மிக முக்கியமானவராக உள்ளார் தனுஷ். நாளுக்கு நாள் இவரது படங்களின் வசூலும் ரசிகர் பட்டாளமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் கர்ணன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று அவரது சினிமா மார்க்கெட்டை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் வெளியாகும் ஜகமே தந்திரம் திரைப்படம் கண்டிப்பாக மாஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட தனுஷ் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களை தவிர்த்துள்ளார்.

அப்படி ஒரு படம்தான் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. ஜெயம் ரவி மற்றும் நதியா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. மேலும் இந்த படத்தின் மூலம் அசின் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக மாறினார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

இந்த படத்தில் முதன் முதலில் மோகன் ராஜா நடிகர் தனுஷை நடிக்க வைக்கத்தான் ஆசைப்பட்டார். ஆனால் தனுஷ் பெரும்பாலும் இந்த படத்தில் ஆர்வம் காட்டாததால் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றது. இருந்தாலும் இந்தக் கதை தனுஷுக்கு கொஞ்சம் கூட செட் ஆகாது என்ற கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

m-kumaran-so-mahalakshmi
m-kumaran-so-mahalakshmi
- Advertisement -spot_img

Trending News