வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரஜினியின் சாபம் தான் எல்லாத்துக்கும் காரணம்.. அவிழ்க்க முடியாத முடிச்சியில் சிக்கிய தனுஷ்

ரஜினியின் சாபத்தால் தனுஷின் குடும்பமே கஷ்டத்தில் உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் தனது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை 18 வருடங்கள் வாழ்ந்த திருமணம் வாழ்க்கையை முடித்து விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் விவாகரத்துக்கு பின் தனுஷின் சினிமா வாழ்க்கையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தனுஷின் அண்ணனும்,இயக்குனருமான செல்வராகவனும் தற்போது மிகப்பெரிய இயக்குனர் என்ற பெயரில் மட்டுமே உள்ளார். ஆனால் தற்போதுள்ள சூழலில் செல்வராகவன் இயக்குனர்கள் பட்டியலில் கூட இடம் பெறவில்லை என்பதே நிதர்சனம்.

இருந்தாலும் சில திரைப்படங்களில் நடித்து ஓரளவு மட்டுமே பணம் சம்பாரித்து வருகிறார். ஆனால் தனுஷ் என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும்,சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தோல்வியடைந்த நிலையில், இனி வரும் படங்களின் வெற்றியின் பொறுத்தே தனுஷால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.

இந்நிலையில் தனுஷ், செல்வராகவனின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரி ராஜா பணம் இல்லாமல் ,தன் சொந்த ஊரான தேனியில் சென்று யாரோ ஒருவரிடம் கடன் பெற்று வட்டிக்கூட கட்ட முடியாமல் தவித்து வருவது பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.

தனது மகன்களின் வளர்ச்சிக்கு பின், படங்களை இயக்குவதிலிருந்து ஓய்வில் இருந்த கஸ்தூரி ராஜா, தற்போது படங்களில் நடிக்கவும்,சீரியல்களை இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். தனுஷின் விவாகரத்து அவரது குடும்பத்தை மனதளவிலும் வருமானத்திலும் இப்படி பாதிக்கும் என்று தனுஷ் கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.

மேலும் ரஜினிகாந்தின் மருமகன் என்பதாலேயே, இதனை வருடங்கள் படவாய்ப்புகளும், மரியாதையும் தனுஷுக்கும், அவரது குடுமபத்திற்கும் இருந்து வந்தது. ஆனால் விவாகரத்தையடுத்து ரஜினியின் உதவியை கூட நாடமுடியாமல் அவரது குடும்பமே ஸ்தம்பித்து வருகிறது. மேலும் தனது மகளின் விவாகரத்தால் மனம் நொந்துபோன ரஜினியின் சாபமே தனுஷிற்கு தற்போது வந்துள்ளது என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Trending News