வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தந்திரமாக காய் நகர்த்தும் தனுஷ்.. சிவகார்த்திகேயனை காலி பண்ண போடும் திட்டம்

சினிமா பொருத்தவரை காலம் காலமாக முன்னணி நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு வருவது தான் வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து இப்பொழுது அஜித், விஜய் வரை இதுதான் தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்குப் பிறகு இந்த நிலைமை மாறும் என்று எதிர்பார்த்த நிலையில் சிம்பு, தனுஷ் இவர்களுக்கிடையே பெரிய போட்டி நிலவியது.

சினிமாவிற்குள் இருவரும் ஹீரோவாக நுழைந்த காலத்தில் இருந்து படங்கள் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நீயா நானா என்று சொல்லும் அளவிற்கு இவர்களிடையே போட்டி இருப்பது ரசிகர்கள் அறிந்த ஒரு விஷயம். அடுத்தபடியாக ஓரளவுக்கு இவங்க இருவருமே நல்லா மெச்சூர்டு ஆனதுக்கு பிறகு அந்த ஒரு பெரிய பரபரப்பை நிறுத்தி விட்டார்கள். சிம்பு அவருடைய வழியில் நடித்து வருகிறார். தனுஷ் அவருக்கேற்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

Also read: சிவகார்த்திகேயன் கூட்டணியை உறுதி செய்த கமல்.. இணையத்தில் காட்டுத் தீயாக பரவும் SK21 அறிவிப்பு

இதற்கிடையில் தற்போது சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன். அத்துடன் இவருடைய படங்கள் ரிலீஸ் ஆனால் மிகப்பெரிய பாராட்டை பெற்று வசூல் ரீதியாகவும் கல்லாக் கட்டியது. இதனை கொஞ்சம் பொறுத்துக் கொள்ள முடியாத தனுஷ் சினிமாவில் தான் வளர்த்து விட்ட பையன் தன்னையே மிஞ்சும் அளவிற்கு வருகிறார் என்று ஒரு எண்ணம் அவருக்கு தோன்றி விட்டது.

அதனால் சிவகார்த்திகேயனை எதிர்மறையாக தாக்குவதற்கு எல்லா வேலைகளையும் தற்போது தனுஷ் பார்த்து காய் நகர்த்தி வருகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் சிவகார்த்திகேயன் படம் ரிலீஸ் ஆகும் போது தன்னுடைய படமும் ரிலீஸ் ஆகவேண்டும் என்று தந்திரமாக வேலை பார்க்கிறார். ஆனால் சிவகார்த்திகேயனோ கடந்த ஆறு வருடங்களாக ரொம்ப நிலுவையில் இழுத்து எடுத்துக் கொண்டிருந்த அவருடைய அயலான் படத்தை எப்படியோ ஒரு வழியாக முடித்திருக்கிறார்.

Also read: அடேங்கப்பா இந்த பாட்டு எல்லாம் தனுஷ் தான் எழுதுனாரா.. அதிக ஹிட்டான 5 பாடல்கள்

அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்ததால் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வந்தார். அந்த படத்தை வருகிற தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து உள்ளார்கள். இதைக் கேள்விப்பட்ட தனுஷ் எப்படியாவது  சிவகார்த்திகேயனுக்கு இந்த படத்தின் மூலம் ஒரு வீழ்ச்சியை கொடுக்க வேண்டும் என்று அவருடன் போட்டி போடுவதற்கு முடிவெடுத்து விட்டார்.

அதனால் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் படத்தை எப்படியாவது கூடிய சீக்கிரம் முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் ரிலீஸ் செய்கிற அதே நாளில் கேப்டன் மில்லர் படத்தையும் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார். பொதுவாக நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுது என்றால் அது எதேர்ச்சியாக நடக்கிற விஷயமாக இருந்தால் ஓகே. ஆனால் அவருடைய படத்துடன் போட்டி போட வேண்டும் என்று தனுஷ் செய்யும் வேலைதான் கொஞ்சம் அதிர்ச்சியை கொடுக்கிறது. பார்க்கலாம் இந்த இரண்டு படங்களும் எந்த மாதிரியான சூழ்நிலையை உருவாக்கப் போகிறது என்று.

Also read: சிம்புவுக்காக மெனக்கெடும் கௌதம் மேனன்.. தயாரிப்பாளர் வெளியிட்ட அடுத்த பட சீக்ரெட்

Trending News