வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தனுசுக்கு அடித்த லக்கு…. ஜோடியான இளம் நடிகைகள்… யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி வெளியானது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்க உள்ளார். இப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

raashi khanna
raashi khanna

இந்நிலையில், இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்க உள்ளனர். அதில் தற்போது இரண்டு நாயகிகள் ஒப்பந்தமாகியுள்ளனர். அவர்கள் வேறு யாருமல்ல தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகிய இருவரும் தான். மேலும் மூன்றாவதாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Trending News