சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

கழுதை தேஞ்சு கட்டெறும்பாயிடுச்சு.. பணத்தாசையால் அதல பாதாளத்திற்கு சென்ற தனுஷ் பட ஹீரோயின்

Dhanush Movie Actress; நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் தான் இந்த நடிகை. அதிலும் தனுசுடன் இவர் இணைந்து நடித்த ஒரு படம் இவரை மாறுபட்ட கோணத்தில் காட்டியது. அதை தொடர்ந்து விரைவிலேயே இவர் முன்னணி அந்தஸ்தையும் அடைந்தார்.

ஆனால் இப்போது ஏறிய வேகத்திலேயே சறுக்கியது போல் ஆகிவிட்டது அவருடைய நிலைமை. நல்ல திறமையான நடிகை என்று பெயர் வாங்கிய இவர் இப்போது அடுத்தடுத்த தோல்வி படங்களால் மொக்கை வாங்கிக் கொண்டிருக்கிறார்.

Also read: இதெல்லாம் தேவையில்லாத ஆணி தான்.. கேப்டன் மில்லர் படத்தை விமர்சித்த பிரபலம்

இதனால் அவருடைய மார்க்கெட்டே மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட நடிகை வேறு யாரும் கிடையாது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். விஜய் சேதுபதி, தனுஷ் உட்பட பல நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்த இவர் சோலோ ஹீரோயின் ஆகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் அவை அனைத்தும் இவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அந்த வகையில் ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா என இவரின் நடிப்பில் மாதத்திற்கு ஒரு படம் வெளிவந்து கொண்டிருந்தது. இருந்தாலும் இவை எதுவும் பெரிய அளவில் லாபம் பார்க்கவில்லை.

Also read: மாமனார், மருமகனுடன் கூச்சமே இல்லாமல் ஜோடி போட்ட 4 நடிகைகள்.. ஜெயிலரில் குத்தாட்டம் போட்ட தமன்னா

இதற்கு முக்கிய காரணம் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போதெல்லாம் முழு அர்ப்பணிப்போடு நடந்து கொள்வதில்லை என்று பேசப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் ரொம்பவும் எதார்த்தமாக நடித்த இவரிடம் இப்போது அந்த ஆர்வமோ, ஈடுபாடோ இல்லையாம். மேலும் இவர் இப்போது தன்னை தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஓகே சொல்லி அட்வான்சை வாங்கி கல்லாப்பெட்டியை நிரப்பி கொண்டு இருக்கிறாராம்.

ஆனால் இப்படியே சென்றால் விரைவில் இவருடைய நிலை கவலைக்கிடமாக மாறிவிடும் என சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பணத்தாசையால் கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் ஓகே செய்யும் இவரின் மார்க்கெட் இப்போது அதல பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

Also read: தொடர்ந்து மூன்று ஹிட் கொடுத்த 5 சக்ஸஸ்ஃபுல் நடிகர்கள்.. பெயரை உடைத்து வெற்றி கண்ட ஜெயம் ரவி

Trending News