வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Dhanush: தனுஷோட அந்த சோகமான பாட்டுல வேலை பார்த்த 4 பேருக்கும் விவாகரத்து.. இனி இத கேக்கும் போதெல்லாம் பாக்கணும்னு இருக்கும்

Dhanush: வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும். இந்தப் பாடல் வரிகள் நடிகர் தனுசுக்கும், அவர் படங்களில் இசை அமைக்கும் இசையமைப்பாளர்களுக்கும் தான் பொருந்தும். தனுஷின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன.

அதில் முதல் காரணம் அவருடைய கடுமையான உழைப்பு என்று சொல்லலாம். அதைத் தொடர்ந்து ஆரம்ப காலகட்டங்களில் தோள் கொடுத்து தூக்கி விட்ட அவருடைய அண்ணன் செல்வராகவன் அவருடைய வெற்றிக்கு பெரிய காரணமாக இருக்கிறார்.

இந்த வரிசையில் பார்த்தால் தனுஷின் படங்களில் அமைந்த பாடல்களும் அவருடைய வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் தான். தனுஷ் படங்களை எடுத்துக் கொண்டால் ஒரு சில படங்கள் சூர மொக்கையாக இருந்தாலும் அதில் பாட்டுகள் சூப்பர் ஹிட் அடித்து விடும்.

தனுஷ் பட பாடல்கள் லிஸ்ட் என்று தனியாக கேட்க ஆரம்பித்தால் அன்றைய நாள் எப்படி போகுது என்றே தெரியாது. தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன், தேன்மொழி பூங்கொடி, ஒரு நாளில், போன்ற நிறைய பாடல்கள் இன்றுவரை இளைஞர்களின் தேசிய கீதமாக இருக்கிறது.

அந்த வரிசையில் கேட்ட உடனேயே கலங்க வைக்கும் பாட்டு என்றால் மயக்கம் என்ன படத்தில் வரும்’ பிறை தேடும் இரவிலே எதை தேடி அலைகிறாய் உயிரே’ பாடல் தான். இந்தப் பாட்டை கேட்டு முடிக்கும் போது நல்ல ஒரு வாழ்க்கை துணை நமக்கும் அமைய வேண்டுமே ஆண்டவா என்று தான் இவ்வளவு நாள் தோன்றியிருக்கும்.

இனி இத கேக்கும் போதெல்லாம் பாக்கணும்னு இருக்கும்

இந்தப் பாட்டில் இருக்கும் இன்னொரு விஷயத்தை நோட் பண்ணினால் தான், அட அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லப்பா அப்படின்னு தோணும். இந்தப் பாட்டுல வேலை செஞ்ச நாலு பேருமே தங்கள் திருமண வாழ்க்கையில் தோற்றவர்கள் என்பதுதான் அந்த விஷயம்.

படத்தின் இயக்குனர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வால் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து ஆனவர். அதைத் தொடர்ந்து படத்தின் ஹீரோ தனுஷ் 18 வருட கால திருமண வாழ்க்கையை சமீபத்தில் தான் முடிவுக்கு கொண்டு வந்தார்.

இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தன்னுடைய மனைவியை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு விட்டார். பாட்டு பாடிய சைந்தவி சைலன்டாக ஜிவி பிரகாஷ் பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் இந்த பாட்டை கேட்கும்போது யாமினி போல ஒரு வாழ்க்கை துணை நமக்கும் கிடைக்க மாட்டார்களா என்ற ஏக்கம் நமக்கு இருக்கும். ஆனா இதுக்கப்புறம் இந்த பாட்ட பார்த்தா அட இதுல வேலை செஞ்ச நாலு பேருக்குமே திருமண வாழ்க்கை சரியில்லாமல் இருந்திருக்கிறது என்றுதான் தோணும்.

இந்தப் பாடலில் நிழல் தேடிடும் ஆண்மையும், நிஜம் தேடிடும் பெண்மையும் என்ற வரி வரும். அது இவர்கள் ஒருவரை ஒருவர் மனதில் வைத்து தான் எழுதப்பட்டதோ என்னவோ.

Trending News