தனுஷ் நயன்தாரா பிரச்சனை நாளுக்கு நாள் இழுத்துக்கொண்டே போகிறது. சமீபத்தில் கோர்ட் கூட நயன்தாராவை ஜனவரி 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க கூறியுள்ளது. இந்த நிலையில், அறிக்கை வெளியிட்ட பின் நயன்தாரா மீது ரசிகர்களுக்கு இருக்கும் தவறான பார்வையை சரி செய்வதற்காக ப்ரோமோஷன்களுக்கு கூட போகாத அம்மணி தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்று பேட்டி அளித்திருந்தார் நயன்தாரா. அவர் அதில் கூறிய விஷயங்கள் எல்லாமே வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தனுஷ் பற்றி மூச்சு கூட விடவில்லை நயன்தாரா.
தனுஷ் எப்படி கோர்ட்ல சந்தித்துக்கொள்ளலாம் என்று இருக்கிறாரோ, அதே போல தான் நயன்தாராவும் இருக்கிறார். மேலும் போறபோக்கில் வலைப்பேச்சில் வரும் 3 பேருக்கும் ஒரு கொட்டு வைத்துள்ளார்.
Back to Back பதிவு..
இப்படி இருக்க இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள். அவருக்கு திரை பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என்று பலர் வாழ்த்து கூறி வருகின்றனர். சூப்பர்ஸ்டார்க்கு ராசியான நடிகை நயன்தாரா. நயன்தாரா முதலில் சரத்குமாருடன் இணைந்து நடித்திருந்தாலும், அவர் நடிப்பில் முதலில் வெளியான படம் சந்திரமுகி.
ஆரம்பத்திலே சூப்பர்ஸ்டார்-க்கு இவர் ஜோடியானதால், இவர்கள் நட்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதை தொடர்ந்து இன்று நயன்தாரா சூப்பர்ஸ்டார்-க்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார். அதே நேரத்தில், தனுஷும் ட்வீட் போட்டுள்ளார்.
இவர்கள் இப்படி Back to back ட்வீட் போட்டது..’ பார்றா.. இதுல கூட இவ்வளவு ஒற்றுமையா..’ என்று ரசிகர்களை நகைக்க வைத்துள்ளது.
தனுஷ் நயன்தாரா இருவருமே சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகர்கள். தனுஷ்-க்கு மாமனாராக ரஜினிகாந்த் இருந்தபோதிலும், அவரை சூப்பர்ஸ்டார் என்ற அந்தஸ்தோடு மட்டும் தான் எப்போதும் மரியாதையோடு பார்த்திருக்கிறார் தனுஷ்.
இதை தொடர்ந்து இன்று இவர் நேரில் சென்று குடும்பத்தோடு நடக்கும் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது.