புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இதுக்கு ஒரு எண்டே இல்லையா! முதல்ல இவங்களுக்கு ஒரு பாயசத்தை போடுண்ணே, உப்புக்கு சப்பா ஒரு கேஸ்

நயன்தாரா தனுஷ் பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. இவர்களது சண்டையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியது நயன்தாரா தான்.

நயன்தாராவுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து இதை செய்தார். ஆனால் அதுவே அவருக்கு பிரச்சனையாக மாறிவிட்டது. பொதுவாக நிறைகுடம் தழும்பாது..

அரை குடம் தான் கூத்தாடும் என்பார்கள். அது போல தான் இவர்கள் இரண்டு பேரின் செயல்பாடுகள் உள்ளது.

இந்த பிரச்சனை ஆரம்பமானத்தில் இருந்து, தனுஷ் தரப்பிலிருந்து சமூகவலைத்தளங்களில் எந்த கருத்தும் தெரிவிக்காமல், நயன்தாராவை left hand-ல் டீல் செய்து வருகிறார்.

நயன்தாராவுக்கு இந்த சமாச்சாரத்தில் பெரிதாக ஆதரவு கிடைக்காத காரணம், அவர் அறிக்கையில் பயன்படுத்திய சில வார்த்தைகள் தான். அது தான் ரசிகர்களை இவருக்கு எதிராக திருப்பியுள்ளது.

இதுக்கு ஒரு எண்டே இல்லையா..

தனுஷின் செயல் தவறு என்று கூறி இருக்கலாம்.. ஆனால் நீங்கள் இந்த நிலைமைக்கு எளிதாக வந்துள்ளீர்கள் என்று கூறியது மிகவும் தவறு.

மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தனுஷுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். நியாயமாக, அவர் இடத்தில் யார் இருந்தாலும் இதை தான் செய்திருப்பார்கள்.

இந்த நிலையில், இவர்களது இந்த பிரச்சனையை கோர்ட்-க்கு சென்று அது ஜட்ஜ்-க்கு தலைவலியாக மாறியுள்ளது.

நயன்தாரா திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படக்காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்டபிலிஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஒரு வகையில் இது netflix-க்கு தேவை இல்லாத வேலை தான். வெளியில் போகிற ஓணானை எடுத்து மடியில் கட்டிக்கொண்டு குத்துதே குடையுதே என்று புலம்பிய கதையாக உள்ளது.

இவர்கள் சண்டையை பார்க்கும்போது, பேசாமல் இருவரும் சேர்ந்து ஏன் ராக்காயி இட்லி கடை என்று ஒரு படம் நடிக்க கூடாது.. என்று ரசிகர்கள் நக்கல் செய்து வருகின்றனர்.

Trending News