செல்வராகவனால் பட்டை தீட்டப்பட்டு வெற்றிமாறனால் வைரமாக ஜொலிப்பவர்தான் தனுஷ். அவருடைய சொந்த வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு சர்ச்சைகள் இருந்தாலும் நடிப்பை பொறுத்தவரை அவர் ஒரு கிங் தான்.
சமீபகாலமாக தனுஷ் மாஸ் படங்களில் நடிப்பதைக் காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் சாதாரண திரைப்படங்களில் நடிப்பதே அவருக்கு மிகப்பெரிய வசூல் மழையை கொட்டுகிறது.
இதன் காரணமாக தனுஷ் தன்னுடைய வழக்கமான பாணியை மாற்றி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க ஆயத்தமாகி வருகிறார். அதற்கு முதல் வேலையாக பழைய இயக்குனர்கள் எல்லாம் கழித்து கட்ட வேண்டும் என முடிவு செய்துள்ளாராம்.
இதுவரை பணியாற்றிய இயக்குனர்கள் அனைவருடனும் இனி பணியாற்ற போவதில்லை என தன்னுடைய வட்டாரங்களில் தெரிவித்துவிட்டாராம் தனுஷ். புதிய புதிய இளம் இயக்குனர்களுடன் புதிய புதிய கதைகளில் நடித்தால் தான் இனி சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என தீவிரமாக யோசித்து முடிவு எடுத்துள்ளாராம்.
ஆனால் குறிப்பிட்ட இரண்டு இயக்குனர்களை தவிர மற்றவர்கள் யாருடனும் திரும்ப படம் செய்யப்போவதில்லையாம். அவர்கள் வேறு யாருமில்லை. நம்ம வெற்றிமாறனும் மாரி செல்வராஜும் தான். இருவரும் தனுஷுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
அதுவும் வெற்றிமாறன் என்ற பெயரைப் பார்த்தாலே அந்த படம் வெற்றி என முடிவு செய்து விடுகின்றனர். அப்படி ஒரு இயக்குனர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் தனுஷ் வேண்டாம் என்று சொல்வாரா. இத்தனைக்கும் தனுஷ் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பதற்கு காரணம் வெற்றிமாறன் இயக்கத்தில் வந்த படங்கள் தான் என்று சொன்னால் மிகையாகாது.