சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வருங்கால அரசியலுக்கு அடிக்கல் நாட்டிய தனுஷ்.. போயஸ் கார்டனில் பல கோடியில் உருவாகும் பங்களா பூஜை புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது தமிழையும் தாண்டி பாலிவுட், ஹாலிவுட் என வேற லெவலில் கெத்து காட்டி வருகிறார். தற்சமயம் இந்திய சினிமாவில் உள்ள நடிகர்களில் கைவசம் அதிக படம் வைத்திருக்கும் நடிகர் தனுஷ் தான்.

பட விஷயத்தில் மட்டும் விஜய் சேதுபதிக்கும் தனுஷுக்கும் போட்டி ஏற்படுகிறது என்று பார்த்தால் தற்போது இந்தியிலும் விஜய் சேதுபதி மார்க்கெட் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும், தனுஷ் நடிப்பில் அடுத்ததாக ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இதில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக போவதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் ஜகமே தந்திரம் படத்தைப் பொருத்தவரை தயாரிப்பாளருக்கும் தனுஷுக்கும் இடையில் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டதாக தெரிகிறது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் D43 படத்தின் முதல் ஷெட்யூலை முடித்து விட்டு விரைவில் அவெஞ்சர்ஸ் கூட்டணியில் த கிரே மேன் படத்தில் இணைவதற்காக அமெரிக்கா செல்ல உள்ளாராம். இதற்கிடையில் தனுஷின் நீண்டநாள் ஆசையான போயஸ் கார்டனில் பகுதியில் பல கோடி மதிப்பில் ஒரு வீட்டை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

dhanush-new-house-ceremony-photo-01
dhanush-new-house-ceremony-photo-01

இதில் தனுஷை தொடர்ந்து தனுஷின் மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார். மீண்டும் பழைய தெம்புடன் வலம்வரும் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ரஜினிகாந்த் அரசியலில் நுழைந்தால் அவரது அரசியல் வாரிசாக தனுஷ் இருப்பார் என எதிர்பார்த்தனர்.

dhanush-new-house-ceremony-photo-02
dhanush-new-house-ceremony-photo-02

ஆனால் அப்படி நடக்கவில்லை. இருந்தாலும் வருங்காலத்தில் தனுஷ் அரசியலுக்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் மாமனார் வீட்டுக்கு பக்கத்திலேயே வீடுகட்டி குடிபோக உள்ளாராம்.

Trending News