முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம்குமார். இவர் ராட்சசன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு வேறு ஒரு படத்திற்கான கதை எழுதி வந்தார். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை தனுஷை வைத்து எடுக்க ராம்குமார் முடிவு செய்திருந்தார். தனுஷூம் ராம்குமார் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
தனுஷ் நடித்த மாறன், திருச்சிற்றம்பலம் படங்கள் தயாராக உள்ளன. இந்த இரண்டு படங்களும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. ஹிந்தியில் தனுஷ் நடித்த அத்ரங்கி ரே படம் டிசம்பர் 24 ஓடிடியில் வெளியாகிறது. தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் D 46 என்ற தெலுங்கு படத்தில் நேரடியாக நடிக்க உள்ளார். நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 என செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்களில் தனுஷ் நடிக்க உள்ளார்.
ராம்குமாரின் அடுத்த ஹீரோ தனுஷ் என சொல்லப்பட்ட நிலையில், தனுஷுக்கு இந்த கதை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். இதனால் மற்ற நடிகர்களுடன் ராம்குமார் பேச்சு வார்த்தையை தொடங்கினார். அப்போது ராம்குமார் சிவகார்த்திகேயனிடம் கதை சொல்ல, அவருக்கு மிகவும் பிடித்து போனது. சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் இப்படத்திற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை முடிந்தவுடன் ஒப்பந்தம் கையெழுத்திட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் படக்குழு வெளியிடும்.
சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தை நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ராம்குமார் இயக்கத்தில் அயலான் படம் அண்டர்புரொடக்ஷனில் உள்ளது. அனுதீப் இயக்கத்தில் நேரடித் தெலுங்குப் படத்திலும், சிங்கப்பாதை என்ற தமிழ்ப் படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ராம்குமாரின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.