வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாமனாரின் இயக்குனரை அலேக்காக தூக்கிய தனுஷ்.. பரபரப்பு கிளப்பிய அடுத்த பட அப்டேட்

72 வயதிலும் எனர்ஜி குறையாமல் இப்போதும் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் மட்டுமல்ல இவருடைய மருமகன் தனுஷும் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என வெரைட்டி காட்டிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சூப்பர் ஸ்டாரின் இயக்குனரை தனுஷ் அலேக்காக தூக்கி இருக்கும் புது படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் அளவு கடந்து காணப்படுகிறது.

Also Read: நெல்சன் மூலம் காய் நகர்த்திய சிவகார்த்திகேயன்.. என்னது இதுதான் அந்த ஜெயிலர் பட கதையா!

தற்போது ரஜினி ஜெயிலர் படத்தில் தனது போஷனை முடித்துவிட்டு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டார். இந்த நிலையில் ஜெயிலர் படத்தில், தலைக்கு மேல் நிறைய வேலைகளுக்கு மத்தியிலும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவசர அவசரமாக தனுஷ் அழைத்ததன் பெயரில் அவரை சந்திக்க சென்றிருக்கிறார்.

ஒருவேளை ஜெயிலர் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்தை துவங்க தனுஷை நெல்சன் சந்தித்திருக்கலாம். தற்போது தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தனுஷ் அடுத்ததாக நெல்சன் உடன் இணையும் முடிவில் இருக்கிறார்.

Also Read: 48 வருடங்கள், 350 படங்கள்.. 70 வயதிலும் நடிப்பை விடாத ரஜினி பட நடிகை

எனவே முதன்முதலாக தனுஷ்- நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தைக் குறித்த தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. இந்த படத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்கவும், விரைவில் இந்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே முன்னணி இயக்குனர்களை அடுத்தடுத்து ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனுஷ், இப்போது மாமனாரை இயக்கிய நெல்சனை டார்கெட் செய்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. நிச்சயம் இந்த கூட்டணியில் உருவாகும் படம் தரமாக இருக்கும் என்றும் விமர்சிக்கின்றனர்.

Also Read: ஜெயிலர் படத்தால் எகிறிய சம்பளம்.. விஜய்க்கு டஃப் கொடுக்க போகும் சூப்பர் ஸ்டார்

Trending News